வாங்க மக்கா வாங்க…

இசைப்பா ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி.

இருக்காத பின்ன ? வைரமுத்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த பொன் மாலை பொழுதில் இன்னமொரு பாடல். நா முத்துகுமாரின் முப்பத்து எட்டாம் பிறந்தநாள் இன்று. இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த புதிய பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நா முத்துகுமார் :

2013ல் மட்டும், 34 படங்கள், 106 பால்கள், 10 படங்களில் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். பத்து ஆண்டு கால சாதனை, தொடர்ந்து அதிக எண்ணிகையில் பாடல்களை எழுதி குவிக்கிறார். வாசிப்பும், நேசிப்பும் தான் இதன் காரணம்.

தினமணி இலக்கிய திருவிழாவின் பேசுகையில் அவர் சொன்னது :

குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லக்க்ஷத்துக்கும் மேற்றப்ட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்

மிகவும் வேகமாக பாடல்கள் எழுதுவது இவரது தனித் திறம். இதன் காரணமாகவே பல வாய்புகள் இவரை தேடி தேடி வருகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் அடைமொழி இல்லாத கவிஞர் இவர் . (இணையத்தில் இவரை பற்றி தேடினால், கவி இளவரசன் என்று வருகிறது. அவர் அதை சூட்டிக் கொள்ளவோ, எந்த படத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்). கடந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான விருதை : ஆனந்த யாழை, இந்திய அரசு இவருக்கு தந்து சிறப்பித்தது. வாழ்த்துக்கள் முத்துகுமார். உங்கள் எளிய உருவம் போல பாடல்களும் இனிமையாக வளரட்டும்.

பல பெரும் இசையமைப்பாளர்களுடன் -இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ்..  -பணியாற்றும் பெரும் பாக்கியம் கொண்டவர் நா மு.  இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு, மறைந்த ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்துள்ளார். ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பல கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்

na muthukumar isaipaa

படத்தின் இசையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காரணம் : இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஹாலிவுட் படத்தை கைவிட்டார். காவியக்கவிஞர் வாலி எழுதிய கடைசிப் பாடல் இடம்பெற்றுள்ள திரைக் காவியம். நாடகக்கலைஞர்களைப் பற்றிய வரலாற்றை சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் வசந்தபாலன். இத்தகு படத்தின் ஒரு பாடல் மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறிய பாடல் தான், அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைத்துள்ளது. குரல்கள் இசையுடன் குழைந்து, இன்பமூட்டுகின்றன. எத்தனை எத்தனை விதமான இசை கருவிகளை ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் என்பதே ஆச்சரியத்தை ஊட்டுகின்றது. ஓவ்வொரு Interludeயும் ஒரு தனி ர(/ரா)கம். செவிமடுத்து ரசிக்கவும்.

படம் : காவிய தலைவன்
பாடல் : வாங்க மக்கா வாங்க…
பாடலாசிரியர் : நா,முத்துக்குமார்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிசரண், Dr.நாராயணன்

ஓ…. ஓ….
செந்தமிழால இசையைக்கூட்டி
பளபள பளவென கத சொல்லுவோம்….
சந்திரன சாட்சிவெச்சி
ஜெகதலபிரதாப கத சொல்லுவோம்….
மதுர ஸ்ரீ பாலா சண்முகனாந்தா
நாடக சபா….

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க (2)

பச்ச மஞ்ச செவப்பு
வெள்ள ஊதா
கருநீல… கண்ணனோடு மீரா (2)

உங்க கண்ணுக்குள்ள
வண்ண வண்ண
மாயம் காட்டுவோம்

நாங்க வானவில்ல – உங்க
நெஞ்சுக்குள்ள கட்டுவோம்

வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க

திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
தாங்கு நத்தோம்
தந்தீங்கு நத்தோம் சொல்லி (2)

நீங்க பாக்காத
உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவ
நெனவாக மாத்துவோம்

வாங்க மக்கா வாங்க
சும்மா நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
யம்மா எங்க பாட்ட கேக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க
வாங்க மக்கா வாங்கி
நீங்க வரிஞ்சு கட்டி வாங்க

வாங்க மக்கா வாங்க…

வழக்கமாக இசைப்பாவில் ஒரே நாளில் இரண்டு பதிவுகள் போடுவதில்லை. இன்று இந்த விதியை சற்றே தளர்த்தி கொண்டுள்ளோம். இன்றளவில் இயங்கி வரும் இரு பெரும் தமிழ் திரைப்பாடலாசிரியர்களுக்கு எங்களின் சிரம் தாழ்த்திய வந்தனம். உங்களாலும் தமிழ் வளர்கிறது, நிம்மதி பெருகுகிறது. வைரமுத்து வாரம் இனிதே தொடரும்.

na muthukumar isaipaa banner 2