மேகம் வந்து போகும்

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கம்,

சில பாடல்கள் கேட்ட உடனே வரிகளாலும் இசையாலும் குரலுக்காகவும் எத்துனை முறையேனும் கேக்கலாம். வசீகரிக்கும் வகையிலும் மிகவும் பிரபலமாகாவிட்டாலும் பாடல் கேட்க மென்மையாக அருமையாக இருக்கிறது. பாடல் இடம் பெற்ற படம் “மந்திரப்புன்னகை” ,பாடல் “மேகம் வந்து போகும்”. வித்யாசாகரின் இசை பாடலை மேலும் மெருகேற்றியது என்றே சொல்லலாம்.

நாயகி காதலைப்பற்றியும் காதல் கொண்ட அவள் நாயகனை தன் அருகில் நினைவுகளாய் சுமப்பதையும் அழகாக கூறுகிறாள். காதல் என்றும் மாறாதது என்றும் என்றும் போகாத ஒன்று எனவும் கூறுகிறாள். பாடலை ரசிக்கலாம் வாங்களேன்.

download (1)

 

பாடல் : மேகம் வந்து போகும்
படம் : மந்திரப்புன்னகை
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், அன்விஷா
பாடலாசிரியர் : அறிவுமதி
இசை : வித்யாசாகர்

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது
மேகம் வந்து போகும்…
தாகம் வந்து போகும்

ஆ.ஆ..ஆ…

தூரம் குறைந்திட நெருங்கிட

முயல்வேலி நம் காதல்
வானம் நனைந்திட பொழிந்திடும்
அடைமழை நம் காதல்

தூரம் குறைந்திட….

அனலுக்கருகில் நின்றிருந்தால்
அருவிக்கருகில் கொண்டுவந்தேன்
கனவுக்கருகில் நின்றிருந்தாள்
கவிதைக்கருகில் கொண்டுவந்தேன்

அலை ஓயும்
கடல் ஓயும்
காதல் மட்டும்
ஓயாது…
மேகம் வந்து
போகும்…
தாகம் வந்து
போகும்

நேரலை மேலே
குமிழ் போலே
மிதந்தேனே ஆருயீரே
மேகலை போலே
கிடைத்தாயே பிழைத்தேனே,
நான் உயிரே

ஆ…..ஆ…

தீயில் சுடர் தொட
இனித்திடும் அனுபவம்
நம் காதல்
காயும் நிலவினில்
கொதித்திடும் கடலலை
நம் காதல்

தீயில் சுடர்….

உடலுக்குகருகில் நின்று இருந்தாய்
உயிருக்கருகில் கொண்டுவந்தேன்
தனிமைக்குகருகில் நின்று இருந்தாய்
தாய்மைக்கருகில் கொண்டுவந்தேன்

உடல்தீரும் உயிர்தீரும்
காதல் மட்டும் தீராது…
மேகம் வந்து போகும்….

மீண்டும் ஓர் இனிய பாடலுடன் சந்திக்கலாம்.

அத்திக்காய் காய் காய்

கவியரசர் கண்ணதாசன்  மறைந்து 32 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவர் எழுதிய ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது; மறுபடிப் பிறந்திருக்கும்’ என்பதை போலவே அவரது ஆன்மா அவரது பாடல்களில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்று இசைப்பா மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் எனக்குப் பிடித்த  ‘அத்திக்காய், காய் காய்’.

இந்தப் பாடல் பலே பாண்டியா படத்தில் வருவது. நான்கு சிவாஜி, நான்கு எம்.ஆர். ராதா என்று குழப்பமோ குழப்பம். நடிகவேளின் நடிப்பு ரொம்பவும் ரசிக்க வைக்கும். நான்கு சிவாஜிகளுக்கு நான்கு கதாநாயகிகள் என்று நம்மைப் படுத்தாமல் விட்ட இயக்குனருக்கு நன்றி!

இன்னொரு பாடலும் இந்தப் படத்தில் சூப்பர் ஹிட்: சிவாஜியும், நடிகவேளும் பாடும் மாமா, மாப்ளே பாடல்!

இந்தப் பாடலை இதன் வரிகளுக்காக எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்பாடலை இரண்டு ஜோடிகள் பாடுவதால் (சிவாஜி, தேவிகா/பாலாஜி, வசந்தி) டி.எம்.எஸ். சுசீலா, பி.பி.எஸ். ஜமுனா ராணி என்று நால்வர் பாடியிருப்பார்கள்.

ஒவ்வொரு வரியிலும் ‘காய்’ என்ற சொல் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

பாடல்: அத்திக்காய் காய் காய்

திரைப்படம்: பலே பாண்டியா  (1962)

இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா,

                              பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.. 

பெ : ஓஓஓ..ஓஓஓ..


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ? 

பெ : ஓ.. ஓ… ஓ.. ஆஹா.. ஆஹா.. 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? 

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

மெல்லிசை மன்னர்கள் விச்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் நால்வர் பாட பாடல் ஆஹா! ஓஹோ! தான்.

kannadasanஇந்தப் பாடல்தான் இசைப்பாவில் வெளிவரும் கவியரசரின் முதல் பாடல்.  ஒன்று தெரியுமா? கவியரசர் பிறந்த நாளன்றுதான் மெல்லிசை மன்னரும் பிறந்தார். பாடல்வரிகளும் இசையும் ஒன்றாக ஒரே நாளில் பிறந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமா பாடல்களில் மாபெரும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்ததன் காரணம் இப்போது புரிகிறது, இல்லையா?
இசைப்பா +

கண்ணதாசன் என்றால் அழகிய கண்களை வர்ணிப்பவன் என்று பொருள்

பின் குறிப்பு: இப்பாடல் முன்னரே வெளி வந்திருக்க வேண்டிய பாடல். பெருந்தவறுக்கு வருந்துகிறோம். உங்கள் கருத்துகளும், திருத்தங்களுக்கும் காத்திருக்கிறோம். நன்றி 

பார்த்த முதல் நாளே

இசையின் வசமானவர்களுக்கு,

வணக்கம். இந்த பாடலை அனுப்பியவர் இசைப்பாவின் மூத்த பங்களிப்பாளர் ரஞ்சனி அவர்கள். அவர்கள் முழுச் சுதந்திரம் கொடுத்து இப்பாடலை வெளியிடக் கோரினார்கள். நான் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. இதன் பாராட்டுகள் அனைத்தும் அவர்க்குரியதே.

இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்பதில்லை. இசை காதுக்கு இனிமையாக இருப்பதில்லை; அல்லது பாடகர் தமிழை கொலை செய்திருப்பார்; குரலினிமை இல்லாத இசை அமைப்பாளரே பாடி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார். மொத்தத்தில் ‘உனக்கு வயதாகி விட்டது’ என்பான் என் பிள்ளை!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என்று எழுத, வரவில்லை என்று சொன்ன கணவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டுக் கொண்டு திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து அவரிடமிருந்து செம திட்டு! ‘இதை விட வயலன்ஸ் படம் வேறு கிடைக்கவில்லையா பார்க்க?’ என்று இடைவேளையின் போதே ஆரம்பித்த திட்டு இன்று வரை ஓயவில்லை. அதனால் ‘விஸ்வரூபம்’ போகலாமா என்று பிள்ளை கேட்டபோது அப்பாவுக்கு டிக்கட் வாங்காதே என்று சொல்லிவிட்டேன். ஹி…ஹி….!

சரி இப்போது ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது. எனது அலைபேசியில் காலர் டியூனாகப் போட்டுக் கொண்டேன். ஒரு புதிய அலையையே உருவாக்கி விட்டது இந்தப் பாடல்!

என் மாணவர்களுக்கு ரொம்பவும் வியப்பு நான் காலர் டியூன் போட்டுக் கொண்டது. இத்தனை நாள் இல்லாமல் இது என்ன? எதற்கு இந்தப் பாடலை போட்டுக் கொண்டேன் என்று கேள்வி மேல் கேள்வி. தமிழ் தெரியாத மாணவர்கள் பாடலுக்கு அர்த்தம் கேட்க ஆரம்பித்து விட்டனர்!  முதல் வரியில் வரும் ‘உன்னை’ என்பது யார் என்று அறிய ஆவல் அவர்களுக்கு!

பொதுவாக பாடல் நன்றாக இருந்தால் காட்சி அமைப்பு படு மோசமாக இருக்கும். காட்சி அமைப்பு நன்றாக இருந்து பாடல் சிலசமயம் படுத்தும். அப்படி இல்லாமல் பாடல், இசை, காட்சி அமைப்பு என்று எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பிடிக்கிறது இந்தப் பாடல். பாடகர்களும் குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீயின் கீழ் ஸ்தாயி குரல் பாடலுக்கு மெருகூட்டுகிறது.

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : பார்த்த முதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !

உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !

காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்,
நீ அறிந்து நடப்பது வியப்பேன் !
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

காட்டி கொடுக்கிறதே,
கண்ணே காட்டி கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே,
கண்ணில் காதல் வழிகிறதே…

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !

தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

கம்பீரமான காவல் அதிகாரிகளுக்கு திரையில் மவுசு கூடியது சூர்யாவின் காக்க காக்க திரைப் படம் வந்தபின் தான். வேட்டையாடு விளையாடு படத்தில் இவர்களின் கம்பீரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறார், கமல் தன் அட்டகாசமான நடிப்பினால்.

அட்டூழியம் செய்யும் அநியாயக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் காவல் அதிகாரி, தன் மனைவியிடம் கொஞ்சி, குழைந்து, சண்டை போட்டு, பின் சரணடைந்து தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை இந்தப் பாடல் காட்சியில் நிரூபிக்கிறார். இது தான் இந்தப் பாடல் வெற்றி பெறக் காரணமோ?

Triple Treat !
Triple Treat !

கௌதம்-தாமரை-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் சிறப்பான பாடல்களில் இதுவும் கண்டிப்பாக இடம்பெறும். வெளிவந்த காலத்தில் பலரது காதுகளையும் குளிரவைத்த இப்பாடல் காட்சியமைப்பிலும் சிறப்பாகவே இருக்கும்.