அழகிய அழகிய கிளி…

நண்பர்களுக்கு இசையுடன் வணக்கம்,

              எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடலோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடல் இடம் பெற்ற படம் அபியும் நானும் வித்யாசாகர் இசையில் பாடல் விறுவிறுப்பாக அமைந்து இருக்கும் . வைரமுத்து வரிகள் கொண்டு பிரிவை எதிர்கொள்ளும் தந்தையின் மனநிலையை அப்படியே உணர்த்தியுள்ளார்.

              மகளின் பிரிவை  எதிர்நோக்கும் விதமாக  பாடல் அமைந்து இருக்கிறது. தந்தையின் மனவலியையும்  அவரின் நிலையையும் ஒவ்வொரு வரியிலும் உணரலாம்.அவர் ஆசையாக தேவதையாக வளர்த்த அப்பெண்ணை, அவள் சேரும் இடம் எப்படி இருக்குமோ என்கிற  உருகும் மனநிலையுடன்  நம் மனதை உருக வைக்கும் அளவிற்கு வடிவமைத்துள்ளார் பாடலாசிரியர்.பாடலை கேட்டவாறே நாமும் பெண் பிள்ளைகள் பெற்ற அப்பாக்களின் உணர்வுகளை உணரலாம் வாருங்கள்.

vairamuthu (1)

படம்:அபியும் நானும்
பாடல்: அழகிய அழகிய கிளி..
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை:வித்யாசாகர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் – பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது  யானை
அய்யோ அய்யோ அநியாயம்
அய்யய்யோ

உயிர்போல் வளர்த்தேன்
உன் உணர்வும் பொய்யையோ
நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும் வலிதந்தது
எனது நிலையம் ,ஆசை கண்ணே

………

…………….

அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை

ஒஹ்ஹ…….

………

…………..

உயிரின் பிரிவு
புதுசாய்  மரணம்
உறவின் பிரிவு
பாதி மரணம்
விதியின் பிடியில்
நானே சரணம்
ஞானம் பழக
இதுவே தருணம்
என் வாசனை வாசனை
வாடையோ இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள்ஆகுமோ – என் பைங்கிளிசேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கை சேருமோ….

…….

………….

நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும்
அது போன்றது எனது நிலையம்
ஆசை கண்ணே ….

……..

……………

தாய் தான் அழுதால் – கூடம் நனையும்
தந்தை அழுதால் – வீடே நனையும்
ஊமை வலியில் – உள்ளம் ஒளியும்
பெண்ணை பெற்றால் – உமக்கும் புரியும்
நான் ஆசையில் சேமித்த புதையலை – ஒரு அந்நியன் திருடுவதோ

அஹ்ஹா…..

எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ
இனி என் வாழிவில்
பெண் வாழ்வு என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவென்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே ….

மீண்டு ஓர் இனிய பாடலுடன் சந்திக்கலாம் !

Advertisements

வண்ணம் கொண்ட வெண்ணிலவே – சிகரம்

இசை ரசிகர்களுக்கு இன்ப வணக்கம்.

சிகரம் படத்தை பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும், எஸ்.பி.பி அவர்களே இசையமைத்த படம். இன்று வரும் பாடல் – வண்ணம் கொண்ட வெண்ணிலே. அவரே பாடிய பாடல் என்பதால், மேலும் சிறப்பு பெறுகிறது. மெல்லிய சோகம் இழையோடும் பாடல் என்றாலும், குரல் சுகத்தை சிந்துகிறது. Dynamics என்பார்கள், வார்த்தைகளுக்கு ஏற்க குரலில், உணர்ச்சியை காட்டுவது. மெட்டுக்கு பங்கம் வராமல், இது நடக்கும் போது, மிகவும் ரசிக்கும் படியாக அமைகிறது. குறிப்பாக:
தேவி வந்து சேர்ந்து விட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வரிகளை கவனித்து கேட்டு பாருங்கள், ஒரு சோகத்தில் ஆரம்பித்து, ஒரு உயிர் பிறக்கும் எக்களிப்பில் வந்து முடியும் குரலில் துவனி!

கவிஞர் வைரமுத்து அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். எதுகை மொவனை பிசகாமல், எளிய வரிகளில், நாயகன் மனதில் எழக்கூடிய உணர்சிகளை படம் பிடித்துள்ளார். கேட்டு மகிழ்வுருங்கள்.

Interludeடில் தான் எத்தனை எத்தனை விதமான வாத்தியங்கள்: வீணை, Strings, தபேலா, drums, சாக்ஸ்ச போன், பியானோ, வயலின் என் ஏக கூட்டணியில் சோபித்து விளங்கும் இசை. எஸ்பிபி அவர்களுக்கு பாட மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளோம். அவர் நிறைய இசையமைக்காது நமக்கு தான் இழப்பு என்றே தோன்றுகிறது.

spb sign

பாடல்: வண்ணம் கொண்ட
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: சிகரம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட…..
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணியில்லை
விண்ணிலே பாதை…..

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை

பக்கத்தில் நீயும்…

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்து விட்டால்
வானத்தில் ஏதும் இல்லை

தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லி கொள்ள வாழ்கை இல்லை!

வண்ணம் கொண்ட…

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நடசத்திர பூக்கள் பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன்….

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்து விட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட…

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் சந்திப்போம்.

பொன்மாலைப் பொழுது!

இசைப்பாவின் சிறப்பு வணக்கம்.

முதலில் வைரமுத்து அவர்களுக்கு 60-ம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். வைரமுத்துவின் பாடல்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சிறப்புப் பதிவுகளாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்றைய பாடல் இளையராஜா + வைரமுத்து +பாரதிராஜா. வைரம் பொதிந்த ராஜாக்களின் கூட்டணி. இசை ரசிகர்களால் எளிதில் மறக்கவியலாத பல வெற்றிப் பாடல்களைத் தந்துவிட்டு இன்றைக்கும் ஏங்கவைக்கும் கூட்டணி. காலம்தான் மீண்டும் சேரவைக்கும். அல்லது சேராமலேயே போகலாம். அதை விடுங்கள்.

வைரமுத்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான பாடல். இப்பாடல் எழுதி முடித்த வேளையில்தான் கவிஞரின் மூத்த மகன் மதன் கார்க்கி பிறந்ததாக அறிகிறேன். பாடலை எழுதி முடித்து விட்டு, பிள்ளையை பார்க்க சென்ற வைரமுத்து மனைவியிடம் (கவிதை) சொன்னது : உனக்கும் எனக்கும் முதல் பிரசவம்.  சில ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் கவிஞரின் இளைய மகன் கபிலன் வைரமுத்துவின் மகள் பிறந்தாள். எனவே இந்நாள் கவிஞர் குடும்பத்துக்கு சிறப்பான நாள்.

vairamuthu 60பாடலில் கையாண்டிருக்கும் முதல் வரியே பெரும் பாராட்டுக்குரியது. அந்தி மாலையை பொன்நிறத்தில் தோய்ந்த மாலையை உணர்த்தும் வரிகள் அதற்கு முன் திரைப்பாடல்களில் கையாளப்படவில்லை. பாரதியாரோடு நின்றுப்போன மாலைநேரத்து வானத்தின் வருணணை மீண்டும் இப்பாடலில் இருந்து தொடங்குகிறது.

இப்போதைக்கும் தத்தமது துறையில் சிறப்பானவர்களாக, மேதைமைப் பொருந்தியவர்களாக இருக்கிற இளையராஜா- எஸ்.பி.பி-வைரமுத்து ஆகியோர் இணைந்த பாட்டு. மெல்லிய உள்ளம் தொடும் தாளக்கட்டில், இதமான ரம்மியம் சேர்க்கும் குரலில், பொருத்தமான எளிமையான நடையில் அமைந்த வரிகள் என அனைத்து அம்சங்களிலும் அருமையான பாட்டு. காட்சியமைக்கப்பட்ட  விதம் மட்டும் கொஞ்சம் திருஷ்டி. வேறு வழியில்லை. பாடலின் சூழ்நிலையைத் தாண்டி ஒலிக்கும் பாடல். இப்போதும் காலையோ,இரவோ இப்பாடலைக் கேட்டால் இதயம் இனிக்கும்.

பாடலின் எளிமைக்கும், இனிமைக்கும் வலு சேர்க்கும் வார்த்தைகள்:

நாணுகிறாள் – பூணுகிறாள்.
ஜாம் – கோம்- பாம் -தாம்
பூரம்- சாரம்
போதி – சேதி– நீதி -தேதி
கேள்வி-வேள்வி

வரிகளும், இசையும், குரலும் இணைந்து இதமளிக்கும் பாடலை வரிகளை உணர்ந்து இசையில் ரசியுங்களேன்.

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஹே ஹோ ம்ம்ம் லல லா…
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு ….)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள்
வீசாதோ..

(இது ஒரு…)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால்
வேள்விகளை
நான் செய்தேன்….

(இது ஒரு..)

{இந்த பாடலில் விட்டு போன சரணம்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் வைரமுத்து பாடியது}

இரவும் பகலும் யோசிக்கிறேன்
என்னையே தினமும் போசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே
வேதங்களா
கூடாது…

(இது ஒரு..)

இன்னும்  இன்னும் இனிமையான பாடல்களைத் தருகிறோம். அதுவரை…

vairamuthu click

சாதி மல்லி பூச்சரமே…

இசையில் கரைந்த இனிய  நண்பர்களுக்கு என் வணக்கம்.

வரிகளுக்காகவே சில பாடல்களைத் தேடித்தேடி கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட  பாடல்களின் வரிசையில்  அழகன் திரைப்படத்தில் இடம்பெற்ற புலமைப்பித்தன் எழுதிய “சாதி மல்லிப்  பூச்சரமே..” என்கிற  பாடல்தான்  இன்று நாம் காணவிருக்கும் பாடல் . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியுள்ளார்.  தெளிவாக அழகாகப்  பாடி  வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றி உள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு.

spb5இந்தப் பாடலில் ‘தமிழை சீராட்டி தொண்டாற்றலாம், நம் தேசத்தை நம் தாயெனப்  பேணிக் காப்போம்’ என்று கூறுகிறார் ஆசிரியர். இப்படி மனிதன் வாழ்வது வாழ்க்கையா? என்று கூறி அவன்  வாழ்வது எப்படி என்று வரிகள் கொண்டு உணர்த்துகிறார்.  சின்ன சின்ன வரிகளுடன் ஆழமான கருத்துக்கள் கொண்டு அடிகள் அமைத்துள்ளார்.  தமிழ் புகழ் ஏற்றி மனிதன் வாழ்கை கூறி சில நிமிட பாடலான சாதிமல்லி பூச்சரமே பாடல் கேட்போம் வாருங்களேன்.

 

படம்: அழகன்
இசை: மரகதமணி (எ) கீரவாணி
கவிஞர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

சாதிமல்லிப் பூச்சரமே – சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி – அவ்வளவு ஆசையடி

என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு..

சாதிமல்லி…

எனது வீடு எனது வாழ்வு –
என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்

கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோருமென
எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்

சாதிமல்லி…

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி,
பாடும் நம்தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

யாதும் ஊரென…

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா?
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்…
கேட்டுக்கோ ராசாத்தி
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

சாதி மல்லி…

இசைப்பா +

 1991 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு  மாநில திரைப்படவிருது அழகன் படத்திற்கு கிடைத்தது.

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்!

இசை ரசிகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து இசைப்பா தளத்தின் பார்வைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நூறு பாடல்கள் என்கிற இலக்கை நெருங்கும் இவ்வேளையில் பாடலாசிரியர் இயக்குனர்,இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் பாடல் முதன்முறையாக இசைப்பாவிற்குள் வருகிறது.

raaja-amaranஇசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் சகோதரர் என்கிற அறிமுகத்தையும் தாண்டி என்றைக்கும்  நிலைத்திருக்கும் பாடல்களையும், படங்களையும் தந்திருக்கிறார் கங்கை அமரன். சின்னத்தம்பி படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையிருக்காது. 90 களில் ரஹ்மான் வருகைக்கு முன்னர் ராஜாவின் வெற்றிப் படங்களுள் சின்னத்தம்பிக்கு பெரிய இடம் உண்டு.

படத்தின் அனைத்து பாடல்களுமே இன்றைக்கும் ரசிக்கக்கூடிய பாடல்களே! கங்கை அமரன், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இப்பாடலுக்குள் ஒரு பெரும்படையே இருக்கிறது. ஆனாலும் யாரும் தனித்துத் தெரியாத பாடல்.

பாடலில்

கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு!

என்றொரு வரி வருகிறது. பாட்டும் அப்படியே கட்டப்பட்டிருக்கிறது. சந்திர-சுந்தரி-மந்திர; ராணி-தேனீ-மேனி; அதரம்-சிதறும்; நாசி-ராசி; இப்படி எக்கச்ச்சக்கமாக சந்தச்சுவை மிளிர பாடல் இயல்பாக செவிக்குள் பாய்கிறது.

அதரம் என்றால் உதடு என்று பொருள் என்பது கூடுதல். இயல்பாகச் செல்லும் பாடல் வரிகளும், பாலசுப்ரமணியம் அதைப் பாடும் விதமும்,  தபேலாவைத் தாண்டி  புல்லாங்குழலும், வயலினுமாக போட்டி போட்டு ஈர்க்கும் இசையும் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகளை அள்ளி வழங்குகின்றன. கேட்டு மகிழுங்கள்.

 

படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர்: கங்கை அமரன்

செம்பவள முத்துக்களை
சேத்து வச்ச சித்திரமே!
தங்க வள(ளை) வைர வள(ளை)
போட்டிருக்கும் முத்தினமே!
வாய் மலர்ந்து நீ சிரிச்சா,
காத்திருக்கும் அத்தனையும்!
நீ வளர்ந்து பாத்திருந்தா,
தோத்துவிடும் இத்தனையும்!!

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே!
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே!

முழு சந்திரன் வந்ததுபோல்
ஒரு சுந்தரி வந்ததென்ன?
ஒரு மந்திரம் செஞ்சதுபோல்
பல மாயங்கள் தந்ததென்ன?
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

பூவடி அவ பொன்னடி
அதத் தேடிப் போகும் தேனீ!
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி!
தாளம்பூவு வாசம் வீசும் மேனியோ?
அந்த ஏழுலோகம் பார்த்திராத தேவியோ?

இரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களப் படைச்ச தாரு!
என்னிக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு!
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம் பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நெனப்பு சிதறும்!
ஏலப் பூவு கோலம் போடும் நாசிதான்!
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்!

மொட்டுக்கள் என்னைக்கு பூவாச்சு?
சித்திரம் பெண்ணென ஆச்சு!
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு!
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

இசைப்பாவில் உங்களுக்கு விருப்பமான பாடல்கள் கருத்துகளாக வரவேற்கப்படுகின்றன.

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

எங்கே போகுதோ வானம் ?

இன்ப இசையின் இனிய வணக்கம்

வெற்றி கூட்டணிகள் என சில உண்டு. நம்மை என்றும் ரசிக்க வைக்கும் அத்தகு அமைப்புகளுள் ஒன்று  -> வைரமுத்து + எஸ்.பி.பி + ஏ.ஆர்.ரஹ்மான் + ரஜினிகாந்த். அப்படியாக சமீபத்தில் வெளிவந்துள்ளது, கோச்சடையான் படத்தின் முதல் பாடல். Single Release. ஒரு பாடலை மட்டும் முதலில் வெளியிடுவது, இந்த காலத்தின் ஜுரம். பல எதிர்பார்ப்புகளை சுமந்து வரும் மாபெரும் (3D) படத்தின் சிறு துளி இது.

Kochadaiyaanநாயகனின் Build-up பாடல்கள் தான் மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் தமிழ் திரை, ஹீரோ சார்ந்தே உள்ளது. அதுவும் ரஜினி என்றால் சொல்லவே வேணாம். பாடலே சாட்சி சொல்கிறது. போருக்கு போகும் வீரனின், நம்பிக்கை வார்த்தைகளாக தோன்றுகிறது, அவனை உற்சாகமூட்டும் கோரஸில் வீரர்கள் பாடுகின்றனர்.

முழுக்கவே இசையால் நிரப்பப்பட்ட இப்பாடல் ரஹ்மான் ரசிகர்கள் அனைவருக்கும் எளிதில் பிடித்துவிடும். இசையின் வேகத்துக்கு சற்றும் குறையாத கவிஞர் வைரமுத்துவின் பாடல்வரிகள்  ஒருபுறம், இசைக்கும், பாடல் வரிகளுக்கும் கூடுதலாக கம்பீரம் ஏற்றும் எஸ்.பி.பி-யின் குரல் என மனதிற்கு உற்சாகம் அளிக்கும் கூட்டணி.
உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்துவிட்டேன் !
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்  !
என ரசிகர்களுக்கும் சேர்த்து ரஜினிக்கான ‘தலைவா!’பாடல் !
ஜெய கோஷங்களும், எக்காளங்களும், சங்க நாதமும், முரசுகளும் சேர்ந்து, குதிரை மீது எழுச்சியுடன் பாய்ந்து செல்லும்  வீரனின் உணர்வை நமக்கு தருகிறது ரஹ்மானின் இசை. தலைவா, தலைவா என ஆடவும் வைக்கிறது….

படத்தின் மற்ற பாடல்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்க வைக்கும் ஒற்றைப் பாடல். இதோ பாடல் வரிகள் உங்களுக்காக……

படம் : கோச்சடையான்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்,
வையம் வென்றாய்,
எல்லை உனக்கில்லை
தலைவா….

காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது.
வெற்றிச் சங்கொலி
என்றுமே ஓயாது
ஓயாது….

ஹே…
உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே…
எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தாலும்
பாயும் பறவையாவோம் !
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகமாவோம் !

காடு தடுத்தால்
காற்றாய் போவாம் !
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம் !

வீரா – வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்.
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்.

லட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை
தலைவா….

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும் – எந்த
நாளும் பொய்த்ததில்லை

இளைய சிங்கமே
எழுந்து போராடு
போராடு….

வீரா – வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால்
உயிர்க் கொண்டு எழுந்துவிட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்

ஹே…
உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே…
எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை
தலைவா….

காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி
என்றுமே ஓயாது
ஓயாது….

பாடல், அதன் வரிகள் மற்றும் சில படக்காட்சிகளுடன் காண்க:

நீண்ட இடைவெளிக்குப் பின் இசைப்பாவில் ரஹ்மான் பாடல் வந்துள்ளது #மகிழ்ச்சி. 125 கோடி செலவில் பிரம்மாண்டமாக, மூன்று வேடங்களில் ரஜினி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களும் இதில் புது தொழில்நுட்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு பாடலை ரஜினி அவர்களே பாடியுள்ளாராம். இன்னும் இன்னும் என்ன என்ன படத்தில் உள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்ககலாம்.

இசைப்பா +
ஏ.ஆர்.ரஹ்மான் – இதுவரை 4 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் : ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்

கருத்துகள், திருத்தங்களை வழக்கம்போல் எதிர்பார்க்கிறோம்.