பூங்காற்றிலே ! ! !

என்றும் மனதை வருடும் பாடல்களில் இன்னும் ஒன்று. இசையில் ஒரு மாஜிக். அனுபவத்தில் ஒரு சோகம். இந்த வார இறுதி இனிதாகட்டும்.

படம் : உயிரே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா

ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை….

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா ?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வளிகின்றதா ?
நெஞ்சு நனைகின்றதா ?

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…
(பூங்காற்றிலே)
(கண்ணில் ஒரு…)

வானம் எங்கும் உன் விம்பம்,
ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே)

சீர்வளர் பசுந்தோகை மயிலான்

தமிழ் கடவுள் முருகன். அவருக்கு இன்னுமொரு அழகான வாழ்த்து. துள்ளும் ராகம். மகிழ்க.

வள்ளி முருகன் !

பாடல்: சீர்வளர் பசுந்தோகை மயிலான்
பாடியவர்: சஞ்சய் சுப்பிரமணியன்
ராகம்: காவடி சிந்து
எழுதியவர்: அண்ணாமலை ரெட்டியார்
முருகப்பெருமான் வாழ்த்து

சீர்வளர் பசுந்தோகை மயிலான், – வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்காவல் வீடா- தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா – வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, – வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்ல உணர் வழியாது மட்டு – மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவோமே.

ஒரு தந்த மாதங்கமுகத்தான் – மகிழ
உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான் – எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே.

சிதம்பரம் போகாமல்

தில்லை அம்பலவாணன். இந்த ஆடல் வல்லான் மீது, தமிழ் உள்ள துதிகள் தான் எத்தனை எத்தனை. அதில் ஒரு முத்து உங்கள் செவிக்கு.

பாடல் : சிதம்பரம் போகாமல்… 
பாடலாசிரியர் : கோபால கிருஷ்ண பாரதி 
பாடகர்: சஞ்சய் சுப்பிரமணியன் 
ராகம்: செஞ்சுருட்டி 
தாளம்: ஆதி 

பல்லவி:
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ—நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ (சிதம்பரம்)

சரணம் 1:
பக்தியும் மனமும் பொருந்தினதங்கே
சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே (சிதம்பரம்)

சரணம் 2:
ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே (சிதம்பரம்)