தமிழ் கடவுள் முருகன். அவருக்கு இன்னுமொரு அழகான வாழ்த்து. துள்ளும் ராகம். மகிழ்க.

வள்ளி முருகன் !

பாடல்: சீர்வளர் பசுந்தோகை மயிலான்
பாடியவர்: சஞ்சய் சுப்பிரமணியன்
ராகம்: காவடி சிந்து
எழுதியவர்: அண்ணாமலை ரெட்டியார்
முருகப்பெருமான் வாழ்த்து

சீர்வளர் பசுந்தோகை மயிலான், – வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்காவல் வீடா- தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா – வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, – வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்ல உணர் வழியாது மட்டு – மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவோமே.

ஒரு தந்த மாதங்கமுகத்தான் – மகிழ
உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான் – எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே.

1 thoughts on “சீர்வளர் பசுந்தோகை மயிலான்

பின்னூட்டமொன்றை இடுக