நீயே உனக்கு ராஜா – தூங்காவனம்

இசை வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு புத்தம் புது பாடலுடன் களமிறங்குகிறோம்.

கமலின் அடுத்த படம் தூங்காவனம். அவரிடமே வேலை செய்த ராஜேஷ் இயக்கும் முதல் படம். ஒரே ஒரு பாடல் தானாம். கமல் பாடியுள்ளார், இதனை Metal Singing என்கிறார்கள். நாயகனை வழிபடும் வரிகளை எழுதியவர் வைரமுத்து. அன்பே சிவம் பாடதில் வரும் வரி

மனதின் நீளம் எதிவோ ?
அதுவே வாழ்வின் நீளமடா !
என்ற வரிகளை போல இந்த பாடலில் :
உள்ளம் என்பது 
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.  

Electronic இசையை தெறிக்க விட்டுள்ளார் ஜிப்ரான். இடையிசையில் வரும் வீணை நல்ல முயற்சி. கேட்டு மகிழுங்கள்.


பாடல் :
நீயே உனக்கு ராஜா
படம் : தூங்காவனம்
இசை : ஜிப்ரான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹாசன்
THoongavanam

நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது
கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

அண்டம் யாவும்
வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும்
தூங்காவனம்…
புயல் வேளையில்
கடல் தூங்குமா ?
அதுபோல் இவன்
தூங்காவனம்…

எந்த பக்கமும்
திசைகள் திறந்தே
உள்ளதே முன்னேற்றம்
உனதே நண்பா
எந்த துக்கமும் உனக்கு
தடையே இல்லையே
எல்லாம் வெற்றியே நண்பா

நீயே உனக்கு ராஜா…

வேலை வீசியே
வாலை ஏந்தியே
வெளிச்சத்தை கொலை
செய்ய முடியாது.
ஜீவஜோதியாய்  நீயும் மாறினால்
அழிவே கிடையாது

உன் கொள்கை என்றும்
அது தூங்கவானம்

தோல்வி என்பதே
ஞான வெற்றி தான்.
துணிந்தால் கடலும்
தொடை அளவே.
உள்ளம் என்பது
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.

உன் துள்ளும் உள்ளம்

அது தூங்கவனம்

நீயே உனக்கு ராஜா…

அண்டம் யாவும்…
எந்த பக்கமும்…

Ya thats it
We are done

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் இணையலாம்.

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்

நீண்டதொரு பயணம், கேட்டுப் பார்க்க வேண்டிய புதிய பாடல்களை சேமித்து கொண்டேன். படம் படமாக, வரிசையாக இசை ஓ(ஆ)டியது. குறிப்பிட்ட பாடல் எந்த படம், யார் பாடியது என்று எல்லாம் சிந்திப்பதற்குள், கேட்டவுடன் காதல் வந்தது. இசையும் வரிகளும் சேர்ந்த ரம்யம்.

இசைப்பாவில் இன்னுமொரு அறிமுகம், இசையமைப்பாளர் ஜிப்ரான், வாகை சூட வா வில் தொடங்கிய அவரது பயணத்தின் புதிய வெளியீடு. ’சரசர சாரக் காத்து’.. ‘செங்கல் சூளக்காரா’வை விட்டு விட்டு அவருக்கு ஒரு புதிய பாடல் உங்களுக்காக

உன்னை காணாமல் போன்ற வசீகரிக்கும் கண்ணன் பாடல். சாருலதா மணி (ஜில்லாக்ஸ், ஜில்லாக்ஸ் பாடிய அதே குரல்) மற்றும் கணேஷ் அவர்களின் கர்நாடிக் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் / பரிச்சியம். மேல் ஸ்தாயியில் விஜய் பிரகாஷ்சின் குரல் மிகவும் பொருத்தம். சாதனா சர்கம் குரலில் உச்சரிப்பு பொருத்தமாக இல்லை (என்று எனக்கு தோன்றுகிறது). அதையும் ஏன் சருலதா அவர்களே பாடவில்லை ? படக்காட்சியில் வித்தியாசம் இருக்க கூடும்

Kannukul potthi vaipen

வரிகளை கேட்டமாத்திரத்தில், மனத்தினுக்குள் சின்னக் கண்ணனை படம் பிடிக்க முடிகிறது, அவன் ஓடுவதும், அவன் டூ காட்டுவதும்… வாலிப கண்ணனுடன் கை கோர்த்து நடக்கும் ஆசை…. ஆஹா பாடலின் ஸ்பரிச பாதங்கள், நெஞ்சில் படும் தருணங்கள்.

ஜலதரங்கத்தின் தொடக்க இசை மிகவும் நேர்த்தி. அதே கோர்வையுடன் கடமும், வயலினும், பின்னணியில் வரும் மெல்லிய சங்கதிகளும் பரவசம். இசைக்கு புதிய நம்பிக்கை தருகிறார் ஜிப்ரான். முகாரி ராகத்தில் வந்துள்ள இனிய மெலோடி பாடல். எதோ ஒரு வகை இனிய மகிழ்ச்சி மயக்கம் தரும் பாடல் (#InLoops)

அடங்காத வியப்பு தருவது வரிகள் தான்! இப்படி ஒரு உன்னிப்பான, பல வித்தியாசங்கள் கொண்ட இசைக்கு எப்படி இவ்வளவு அழகான வரிகள் ?

thirumanam ennum nikkha nazriya

பாடலாசிரியர் : பார்வதி
பாடல் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
படம் : திருமணம் என்னும் நிக்காஹ் 
இசையமைப்பு : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா !
விஷம கண்ணனே வாடா வா !

கண்ணுக்குள்….

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற,
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர.
மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேன,
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாய்.
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாய்.
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன் !

கண்ணுக்குள்…

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்,
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்.

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்,
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்,
முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்,
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள்….

பாடலின் வரிகளுடன் வந்துள்ள இந்த காணொளி இன்னுமொரு நேர்த்தி, வார்த்தைகளின் Transition மற்றும் Font Face ஈர்க்கும் படி, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இன்னும்
இனிய பாடல்கள்
இங்க வரும் !