சாதி மல்லி பூச்சரமே…

இசையில் கரைந்த இனிய  நண்பர்களுக்கு என் வணக்கம்.

வரிகளுக்காகவே சில பாடல்களைத் தேடித்தேடி கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட  பாடல்களின் வரிசையில்  அழகன் திரைப்படத்தில் இடம்பெற்ற புலமைப்பித்தன் எழுதிய “சாதி மல்லிப்  பூச்சரமே..” என்கிற  பாடல்தான்  இன்று நாம் காணவிருக்கும் பாடல் . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியுள்ளார்.  தெளிவாக அழகாகப்  பாடி  வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றி உள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு.

spb5இந்தப் பாடலில் ‘தமிழை சீராட்டி தொண்டாற்றலாம், நம் தேசத்தை நம் தாயெனப்  பேணிக் காப்போம்’ என்று கூறுகிறார் ஆசிரியர். இப்படி மனிதன் வாழ்வது வாழ்க்கையா? என்று கூறி அவன்  வாழ்வது எப்படி என்று வரிகள் கொண்டு உணர்த்துகிறார்.  சின்ன சின்ன வரிகளுடன் ஆழமான கருத்துக்கள் கொண்டு அடிகள் அமைத்துள்ளார்.  தமிழ் புகழ் ஏற்றி மனிதன் வாழ்கை கூறி சில நிமிட பாடலான சாதிமல்லி பூச்சரமே பாடல் கேட்போம் வாருங்களேன்.

 

படம்: அழகன்
இசை: மரகதமணி (எ) கீரவாணி
கவிஞர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

சாதிமல்லிப் பூச்சரமே – சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி – அவ்வளவு ஆசையடி

என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு..

சாதிமல்லி…

எனது வீடு எனது வாழ்வு –
என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா?

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்

கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோருமென
எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்

சாதிமல்லி…

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி,
பாடும் நம்தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

யாதும் ஊரென…

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா?
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்…
கேட்டுக்கோ ராசாத்தி
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

சாதி மல்லி…

இசைப்பா +

 1991 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு  மாநில திரைப்படவிருது அழகன் படத்திற்கு கிடைத்தது.