பறவையாப் பறக்கிறோம் – கயல்

இசையின் வணக்கம்

கும்கி படத்தில் வரும் “எல்லா ஊரும் “ என்று பாட்டை போல, கயல் பாத்தில் வரும் பாடலிது. நாடோடி வாழ்கை, ஏது வந்தாலும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனம். சந்தோஷத்தை அளவில்லாமல் நுகரும், இளமை காளை பருவத்தில் உள்ள கதாநாயகனின் மனத்துடிப்பு. இயற்கையுடன் இயந்து வாழும் அவனது நாடோடி வாழ்க்கை, சிறு சிறு விஷயங்களையும் சிலிர்ப்புடன் அனுபவிக்கிறது. இமான் இசை உற்சாகமூட்டுகிறது. யுகபாரதி வரிகள், நாமும் அப்படி இருக்கலாமே என்று ஏங்க வைக்கிறது. ஹரிச்சரன் குரல் துள்ளல் ஆட்டம் போடா வைக்கிறது. ரசித்து மகிழலாம் வாருங்கள்.

Kayal Hero

பாடல்: பறவையாப் பறக்கிறோம்
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஹரிசரண்
படம்: கயல்

பறவையாப் பறக்கிறோம்,
காத்துல மெதக்குறோம்,
போற வழியில,
பூக்களா சிரிக்கிறோம்!
எங்க ஊரு ஒலக,
ஊரா நினைக்கிறோம்!

ஏ வீடு வாசல் வீதி
ஒன்னும் வேணாம்!
ஏ காடு மேடு கடலத்
தாண்டி போவோம்!
சூரியன் போல
நாங்க சுழலுவோம்,
சோகம் வந்தா
குப்பையில வீசுவோம்!

பூமி பந்து மேல
ஒத்துயடி பாத போடுவோம்.
அந்த வானவில்லு,
எங்களுக்கு சோடி.
தினம் வட்ட நிலா,
கூட சில்லு ஆடி.
மேகம் ஏறி,
வெரசா நடப்போமே.
அந்த மின்னல் கொடிய,
கயிறா திரிப்போமே!

பறவையா…

ஏ ஆடு மாடு கோழி
எங்களுக்கு கூட்டு!
அத போல வாழ
தேவையில்ல நோட்டு!
கண்டத வாங்கி
சேர்க்க நினைக்கல!
ஒரு தந்திரம் போட்டு
ஊர கெடுக்கல!
நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்!
இந்த சின்னம்சிறு பிஞ்சு போல
உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவல கிடையாதே
நானா போற பாத
எதுவும் முடியாதே

பறவையா பறக்கிறோம்
காத்துல மெதக்குறோம்!

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் இணைவோம்

உண்மை ஒரு நாள் வெல்லும் – லிங்கா

இசை வணக்கம்

லிங்காவின் ஒரே சோகப் பாடல், ஆனால் இசையும் வரிகளும் மிளிர்கிறது. தலைவனுக்கேது தாழ்வு ? அவன் தோற்றாலும், அதில் ஒரு உண்மை இருக்கும். இது என்றுமே ரஜினி படத்தில் வரும் ஒரு கட்டம். இதற்காக பல படங்களில் பாடலகள் உண்டு : பட்ச்ஷா, அண்ணாமலை, பாபா.. என் பாட்டில் நீள்கிறது.

சத்தியத்தின் சங்கமம் நாயகன், ஆனாலும் அவனை சூது கவ்வுகிறது. ஆகாச குரல் அவனை நோக்கி பாடினால் எப்படி இருக்கும், என வைரமுத்து படம் பிடித்துள்ளார். தண்ணீர் மீது அணைக் கட்டும் ரஜினி சாகும்போது/துவண்டு விழும் போது வரும் பாடல் இது என நம்புகிறேன்.

குழலும், வயலினும் குலைந்து சோகத்தில் சோபைப் பெறுகின்றன. மெல்லிய மெட்டுடில் கரைந்துள்ளர் ஹரிசரண். பல ரஹ்மான் பாடல்களின் சாயல் இதில் உள்ளது. வைரமுத்துவின் வாரத்தை ஜாலங்களில் மோனைகளும், ஏதுகைகளும் அட்டகாசம்! நல்ல சங்க பாடல்களை, பழமொழிகளை இலகுவாக கையாளுகிறார். கேளுங்கள்.

Lingaa music release

பாடல்: உண்மை ஒரு நாள் வெல்லும்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: ஹரிசரண்
படம்: லிங்கா

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாத… கலங்காதே… கலங்காதே…

ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயே அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!

சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.

பள்ளத்தில் ஓர்
யானை வீழ்ந்தாலும்,
அதன் உள்ளத்தை
வீழ்த்திவிட முடியாது!

உண்மை ஒரு நாள்…..

சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண்
எல்லாம் போனாலும்
அவன் புன்னைகையை
கொல்லையிட முடியாது!

உண்மை ஒருநாள்….

இனிய பாடலுடன், இணைய வழி இணைவோம்.

உன்ன இப்ப பார்க்கணும் – கயல்

மீண்டும் அதே வெற்றி கூட்டணி – இமான் + யுகபாரதி + பிரபு சாலமன். கும்கி-யில் களமிறங்கி கலக்கியவர்கள், இந்த தளத்திலும் கும்கி தான் மிக பெரும் ஹிட் இன்றுவரை

இந்த முறை கயல் படத்தில், இந்த கூட்டணியின் பாடல்கள் அசத்தலாக வந்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் – உன்ன இப்ப பார்க்கணும். பார்த்துக் கொள்ள ஆர்வமுடன் எதிபார்க்கும், நாயகன் நாயகியின் மனநிலையை விவரிப்பது போல அமைந்துள்ள பாடலிது. குரலில் ஒரு ஏக்கம் இனிக்கிறது. இடையிசைகள் (Interlude) இரண்டும் அபாரம், அதை மட்டுமே தனியா loop-ல போட்டு அனுபவிக்கலாம். மிகவும் எளிய, அதே சமயம் ஆங்கிலம வாசம் துளியும் வீசாத தமிழ் நடையில் நம்மை இழுத்து போடுகிறார் யுகபாரதி. ஹரிச்சரண், அதிவேகமா முன்னேறி வரும் இளம் பாடகர், அருமையான குரல் வளம். தமிழ் திரை உலகில் பெரும் வலம் வருவார்.

kayal

பாடல்: உன்ன இப்ப பார்க்கணும்
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்
படம்: கயல்

உன்ன இப்ப பார்க்கணும்
ஒன்னு பேசணும்
என்ன கொட்டி தீர்க்கணும்
அன்ப காட்டணும்

உறவே… மனம் தேம்புதே .
உசிரே… தர ஏங்குதே.
நீ எங்கயும்
போகாத நான்
வாரேன் வாடாத !

உன்ன இப்ப…

இங்கே கடல்,
அங்கே நதி ,
இணைந்திட நடை போடுதே!
அங்கே வெயில்,
இங்கே நிழல்,
விழுந்திட இடம் தேடுதே!

தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .
வரியா விதி
என்னென்ன செய்திடுமோ ?
முடிவில் உயிர்
வண்ணங்கள் மாறிடுமோ ?

உன்ன இப்ப…

இங்கே உடல்,
அங்கே உயிர்,
இதயத்தின் வலி கூடுதே!
எங்கே நிலா என்றே விழி,
பகலிலும் அலைந்தோடுதே!

காயும் இருள் நானடி,
பாயும் ஒளி நீயடி.
கதிரே வந்து,
கண்ணோடு கலந்துவிடு.
கலந்தே இவன்
நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப…

இன்னமொரு இனிய பாடலுடன் விரைவில் சந்திப்போம். நாளை லிங்கா பாடல்கள் வெளிவருகிறதாம். எப்பொழுதும் போல், அதிவிரைவில் வரிகள் உங்கள் ரசனைக்கு வைக்கப்படும்