சீர்வளர் பசுந்தோகை மயிலான்

தமிழ் கடவுள் முருகன். அவருக்கு இன்னுமொரு அழகான வாழ்த்து. துள்ளும் ராகம். மகிழ்க.

வள்ளி முருகன் !

பாடல்: சீர்வளர் பசுந்தோகை மயிலான்
பாடியவர்: சஞ்சய் சுப்பிரமணியன்
ராகம்: காவடி சிந்து
எழுதியவர்: அண்ணாமலை ரெட்டியார்
முருகப்பெருமான் வாழ்த்து

சீர்வளர் பசுந்தோகை மயிலான், – வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்காவல் வீடா- தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா – வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, – வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்ல உணர் வழியாது மட்டு – மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவோமே.

ஒரு தந்த மாதங்கமுகத்தான் – மகிழ
உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான் – எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே.

சிதம்பரம் போகாமல்

தில்லை அம்பலவாணன். இந்த ஆடல் வல்லான் மீது, தமிழ் உள்ள துதிகள் தான் எத்தனை எத்தனை. அதில் ஒரு முத்து உங்கள் செவிக்கு.

பாடல் : சிதம்பரம் போகாமல்… 
பாடலாசிரியர் : கோபால கிருஷ்ண பாரதி 
பாடகர்: சஞ்சய் சுப்பிரமணியன் 
ராகம்: செஞ்சுருட்டி 
தாளம்: ஆதி 

பல்லவி:
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ—நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ (சிதம்பரம்)

சரணம் 1:
பக்தியும் மனமும் பொருந்தினதங்கே
சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே (சிதம்பரம்)

சரணம் 2:
ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே (சிதம்பரம்)

மறு வார்த்தை பேசாதே!

அறிமுகம் தேவை இல்லாத பாடல். பல நூறு முறை கேட்டுவிட்டேன்… இன்னும் இன்னும் இனிக்கிறது. தாமரை + கெளதம் + சித் + தர்புகா சிவா அசத்தல் கூட்டணி 😀

சென்னையில் திருவையாறு விழாவில் சித் ஸ்ரீராம் பாடிய கர்நாடிக் பதிப்பு : https://www.facebook.com/Thillai.Elanthendral/videos/530859777349980/

எனக்கு பிடித்த, இந்தியன் ராகாவின் கர்நாடிக் வார்ப்பு : https://www.youtube.com/watch?v=Ju_vObcp00w

maruvartahi

பாடல் : மறு வார்த்தை பேசாதே
இசை : நிவாஸ் பிரசன்னா  
பாடலாசிரியர் : தாமரை 
பாடகர்: சித் ஸ்ரீராம்
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ…!
முடிவும் நீ…!
அலர் நீ…!
அகிலம் நீ…!

தொலைதூரம் சென்றாலும்…
தொடுவானம் என்றாலும் நீ…
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் …!

இதழ் என்னும் மலர்கொண்டு..
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய் ..!

பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்..
மழை காலம்..!!