நீல வானம், நீயும் நானும்

பா – 02 ~ முதல் சிறப்பு பதிவு

இசை மற்றும் திரை உலகை சார்ந்தவர்களின் பிறந்தநாள் அன்று அவர்களுடன் தொடர்புடைய பாடல்களை,இசைப் பா பெருமையுடன் சுமந்து வரும். இது போல, முதல் முறையாக இன்று ஒரு சிறப்புப் பா களம் இறங்குகிறது !

ஹாலிவுட் உலகில் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்னும் கதாப்பாத்திரம் பிறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிறது என்று சிறப்பு கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. கவனிக்க வேண்டியது, இந்த பாத்திரத்தை பல நடிகர்கள் இன்று வரை எடுத்து கையாண்டுயுள்ளனர். ஆனால் இங்கோ, அதை விட பெரிதாக, ஒரு மனிதன் ஒரு சகாப்தத்தை படைத்து வாழ்கிறான். கலைஞானி பத்மஸ்ரீ டாக்டர் கமல் ஹாசன், இன்று ஐம்பத்து எட்டாவது அகவையை தொட்டு உள்ளார். நம் சார்பில் அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

கமலின் சுய வாழ்கை பற்றி பல கருத்துகள் / விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கலைஞன் என்ற முறையில் அவர் ஒரு சிகரம் தான். நடிப்பு, தயாரிப்பு, நடனம், அலங்காரம், பாடல்கள் எழுதுதல்,(அதனை உணர்ந்து) பாடுதல்….. என அவருக்கு பல பரிணாமங்கள் உள்ளன. அவரே எழுதி பாடிய பாடல் ஒன்று :

kamal hassan
கவிஞர் கமல்

பா – 2

பிளாஷ் பாக் என்பது ஒரு மிக சிறந்த கதை சொல்லும் யுக்தி. பாடலின் சூழல் : தான் ஆசையாய் காதலித்து மணம் முடித்து, பறிகொடுத்த காதலியைப் பற்றி, காதலை பற்றி கூறம் நாயகன். இந்த பாடல் திரையில் பார்க்கும் பொழுது, நீங்களே கவனித்து இருப்பீர்கள். கால ஓட்டத்தில் வரிசையாக நடந்த சம்பவங்கள், தலைகீழாக வரும் !

பாடலாசிரியர் : கமல் ஹாசன்
பாடிவர்கள் :கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
இசை : தேவிஸ்ரீபிரசாத்
படம் : மன்மதன் அம்பு

நீல….. வானம், நீயும்…… நானும்

கண்களே பாஷையாய், கைகளே ஆசையாய் ,
வையமே கோவிலாய், வானமே வாயிலாய் ,
பால்வெளி பாயிலே, சாய்ந்து நாம் கூடுவோம் !
இனி நீ என்று நான் என்று, இரு வேறு ஆள் இல்லையே !

நீல வானம் (The Blue Sky), நீயும் நானும் (U n I).

ஏதேதோ தேசங்களை, சேர்க்கின்ற நேசம்தனை,
நீ பாதி நான் பாதியாய், கோர்க்கின்ற பாசம்தனை,
காதல் என்று பேர் சூட்டியே, காலம் தந்த சொந்தம் இது !
என்னை போலே பெண் குழந்தை,
உன்னை போலொரு ஆண் குழந்தை,
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றவது, இன்னோரு உயிர் தானடி!

நீல வானம்………… நீயும் நானும்……………….

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்………
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்………
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்………

ஆறாத காயங்களை, ஆற்றும் நம் நேசம் தானைய்,
மாளாத சோகம் தனை, மாய்திடும் மாயம் தனை,
செய்யும் விந்தை காதலுக்கு, கைவந்தொரு கலை தானடி !
உன்னை ,என்னை, ஒற்றி ஒற்றி, உயிர் செய்யும் மாயமும், அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றவது, இன்னோரு உயிர் தானடி !

நீநீநீநீலவானம்ம்ம்ம்ம்ம் …….
நீநீநீநீயும் நானும்ம்ம்ம்ம் …….

நிச்சயம் இந்த பாடலை நீங்கள் ரசித்து இருப்பீர்கள்! இசைப் பா தளத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . மேலும் ஒரு விஷயம் :

அது என்ன யாரவது ஏதாவது, யாரவது, புரியாத மாதிரி பேசினா ‘ஏன் கமல் மாதிரி பேசுற’ என்னும் வினா ?

இந்த பாடலாவது புரியுதானு, செத்த பார்த்து சொல்லுங்க ? ? ?

பிகு :  இசைப் பாவிற்கு என்ன ஒரு வரவேற்பு!!! இன்றைய தினம் வோர்ட்பிரஸ் ‘முன்னணி இடுகைகளிலும்‘, ‘ப்ளாக் ஆப் தி டே‘சிலும் வந்துள்ளது. மேலும் உங்கள் ஆதரவும், விருப்பங்களும் எங்களுக்கு தேவை. இன்னமும் தளம் உங்களால் வளர்ந்து கொண்டே உள்ளது. அன்புக்கு நன்றிகள் !!!