என்னமோ ஏதோ

வணக்கம்.
இன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பிறந்தநாள்.
மனம் மயக்கும் பல்வேறு மெலடிப் பாடல்களைத் தந்த ஹாரிஸ். மிக விரைவாக முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து இப்போது வரை தக்கவைத்துள்ளார். சில விமர்சனங்கள் இருந்தபோதும், இனிய பாடல்கள் பலவற்றை தந்தவர் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் ’பளிச்’ அறிமுகத்திற்குப் பின் அவருக்கு பேர் வாங்கித் தந்த பாட்டுதான் என்னமோ ஏதோ. திரையரங்கில் இப்பாடல் ஒலிக்கையில் மொத்த அரங்குமே கொண்டாடிய பாடல். இன்னொரு சிறப்பு என்னவெனில் குவியம் என்கிற அறிவியல் (தமிழ்) வார்த்தை பயன்படுத்தப்பட்ட பாடல்.
வெளிநாடுகளில் எடுக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே குளிர்ச்சியான பாடல்.  புகைப்படக் கலைஞனின் காதலைச் சொல்லும் பாடல். இனிய மெலடி. வேறென்ன? அனைவருக்கும் பிடித்தமான பாட்டுதானே!
படம்: கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: கார்க்கி
பாடியவர்கள்: ஆலாப் ராஜு, பிரஷாந்தினி
என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ குவியமில்லா…
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ
உருவமில்லா…
உருவமில்லா நாளை!
ஏனோ குவியமில்லா…
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ அரைமனதாய்
விடியுது என் காலை!
என்னமோ ஏதோ…
மின்னிமறையுது விழியில்
அண்டிஅகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ…
சிக்கித் தவிக்குது மனதில்
றெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா
குவியமில்லா – ஒரு காட்சிப் பேழை!
ஏனோ உருவமில்லா
உருவமில்லா நாளை!நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே!
முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்

சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

(என்னமோ ஏதோ)
சுத்திச் சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?
கனாக்காணத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ?

நிழலை திருடும் மழலை நானோ?

 (என்னமோ ஏதோ)
***********
இசைப்பா+
ஹாரிஸ் ஜெயராஜ் 2009-ல் கலைமாமணி விருது பெற்றுள்ளார்
***************
பிறந்தநாள் வாழ்த்துகள் ஹாரிஸ் ஜெயராஜ்!

 

மற்றுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.