மேகம் வந்து போகும்

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கம்,

சில பாடல்கள் கேட்ட உடனே வரிகளாலும் இசையாலும் குரலுக்காகவும் எத்துனை முறையேனும் கேக்கலாம். வசீகரிக்கும் வகையிலும் மிகவும் பிரபலமாகாவிட்டாலும் பாடல் கேட்க மென்மையாக அருமையாக இருக்கிறது. பாடல் இடம் பெற்ற படம் “மந்திரப்புன்னகை” ,பாடல் “மேகம் வந்து போகும்”. வித்யாசாகரின் இசை பாடலை மேலும் மெருகேற்றியது என்றே சொல்லலாம்.

நாயகி காதலைப்பற்றியும் காதல் கொண்ட அவள் நாயகனை தன் அருகில் நினைவுகளாய் சுமப்பதையும் அழகாக கூறுகிறாள். காதல் என்றும் மாறாதது என்றும் என்றும் போகாத ஒன்று எனவும் கூறுகிறாள். பாடலை ரசிக்கலாம் வாங்களேன்.

download (1)

 

பாடல் : மேகம் வந்து போகும்
படம் : மந்திரப்புன்னகை
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், அன்விஷா
பாடலாசிரியர் : அறிவுமதி
இசை : வித்யாசாகர்

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது
மேகம் வந்து போகும்…
தாகம் வந்து போகும்

ஆ.ஆ..ஆ…

தூரம் குறைந்திட நெருங்கிட

முயல்வேலி நம் காதல்
வானம் நனைந்திட பொழிந்திடும்
அடைமழை நம் காதல்

தூரம் குறைந்திட….

அனலுக்கருகில் நின்றிருந்தால்
அருவிக்கருகில் கொண்டுவந்தேன்
கனவுக்கருகில் நின்றிருந்தாள்
கவிதைக்கருகில் கொண்டுவந்தேன்

அலை ஓயும்
கடல் ஓயும்
காதல் மட்டும்
ஓயாது…
மேகம் வந்து
போகும்…
தாகம் வந்து
போகும்

நேரலை மேலே
குமிழ் போலே
மிதந்தேனே ஆருயீரே
மேகலை போலே
கிடைத்தாயே பிழைத்தேனே,
நான் உயிரே

ஆ…..ஆ…

தீயில் சுடர் தொட
இனித்திடும் அனுபவம்
நம் காதல்
காயும் நிலவினில்
கொதித்திடும் கடலலை
நம் காதல்

தீயில் சுடர்….

உடலுக்குகருகில் நின்று இருந்தாய்
உயிருக்கருகில் கொண்டுவந்தேன்
தனிமைக்குகருகில் நின்று இருந்தாய்
தாய்மைக்கருகில் கொண்டுவந்தேன்

உடல்தீரும் உயிர்தீரும்
காதல் மட்டும் தீராது…
மேகம் வந்து போகும்….

மீண்டும் ஓர் இனிய பாடலுடன் சந்திக்கலாம்.

மழையில் குளித்த மலர்வனம்!

இசை வணக்கம்.

ஒரு மென்மையான பாடல். இதுவும் அதிகம் அறியப்படாத பாடல். ஆனால், வழக்கம்போல இனிய பாடல்! தொடக்கத்தில் அதிர ஆரம்பிக்கும் இசை 10 நொடிகளில் மனதிற்குள் நிறையத் தொடங்குகிறது. பாடகர் தொடங்கியதும் பாடல் வரிகளும் அப்படியே! பா.விஜய்யின் சந்த நயங்கள் பெரும்பாலும் அறிந்ததே. அது இப்பாடலில் இன்னொரு முறை வெளிப்படுகிறது. இனிய காதல் பாடல். கவிஞரின் வருணனைதான் பாடலின் சிறப்பு. தமிழுக்கு தேவையும் அதுதானே!

விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி

கற்பனை எண்ணங்களுக்கு கொஞ்சமாய் வண்ணம் குழைத்து வார்த்தைகளில் விளையாடும் பாடலுக்கு, நேர்த்தியாக, பக்கபலமாக இணைந்து ஒலிக்கத் துவங்குகிறது இசை. ஒவ்வொரு இடையிசையும் அருமையே!குறிப்பாக இரண்டாம் இடையிசை நடனமாடத் தூண்டும் வேகம்! அதன் தொடர்ச்சியாக கார்த்திக்கின் குரல் ரம்மியம்.

அடடா! பாடல் பாடல்!
அதுதான் பாடல் பாடல்!

தொடங்கிய கம்பீரத்துடனே பாடலும் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில தகவல்கள். பாடலை எழுதிய கவிஞரே இப்படத்தின் நாயகன்! ஆம். பா.விஜய் நாயகனாக நடித்த இரண்டாம் படம். பெரும் பொருட்செலவில், முன்னணி நாயகர்களின்  படத்தைக் காட்டிலும் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு இனிய பொங்கல் திருநாளுக்கு வெளியாகிய படம். இன்னும் இன்னும் இனிய பாடல்களை தன்னகத்தே கொண்ட படம். படத்தின் கதையின் மூலம் இன்னும் வியப்பானது! இருக்கட்டும் இன்னொரு பாடலில் பார்க்கலாம். இன்னொரு தகவல் பாடலின் காணொளி youtube-ல் காணவில்லை. ஒலி மட்டும் இருக்கிறது. ஒளி இல்லை. அதுவும் வசதிதானே! பாடலை மட்டும் சுகமாக கேட்கலாம்!!

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், அன்விஷா

மழையில் குளித்த மலர்வனம்
மாலைநேரக் கடல் நிறம்
ஒற்றைக் கவிதை வெண்ணிலா
அற்றைப் பூக்களின் திருவிழா

அடடா! அழகு அழகு!
அதுதான் அழகு அழகு!
அடடா! அழகு அழகு!
அதுதான் அழகு அழகு!

(மழையில் குளித்த…)

கொஞ்சம் தாராள காதலி
புலனில் தேனூற்றும் கொலுசொலி
விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி

அடடா! கனவு கனவு!
அதுதான் கனவு கனவு!
அடடா! கனவோ கனவு!
அதுதான் கனவோ கனவு!

ஈரம் உலராத இதழ்ச் செடி
இறங்கி முன்னேறும் கழுத்தடி
ஒட்டி உடையாத இடைக்குடம்
கொட்டி உதிராத கால்தடம்

அடடா! இளமை இளமை!
அதுதான் இளமை இளமை!
அடடா! இளமை இளமை!
அதுதான் இளமை இளமை!

மூடி வைக்காத எழுதுகோல்
மூச்சு இல்லாத உணர்வுபோல்
தரையில் மிதக்கும் கனவுகள்
எழுதி முடியாத கடிதங்கள்

அடடா! காதல் காதல்!
அதுதான் காதல் காதல்!
அடடா! காதல் காதல்!
அதுதான் காதல் காதல்!

(மழையில் குளித்த)

இசைப்பா+

இத்திரைப்படம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் 50-வது திரைப்படம்

மற்றுமொரு இனிய பாடலோடு மீண்டும் விரைவில் இணைவோம்.