நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa
நா முத்துகுமார் அஞ்சலி

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

இசைப்பா+

நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்

  1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்

  2. அழகே… அழகே… – சைவம்

மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்

na muthukumar isaipaa banner 2
நா மு பாடல்கள்

 

6 thoughts on “கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி

  1. கவிஞர் முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

  2. வணக்கம் ஐயா… என் பெயர் பழனி…. மலேசியாவிலுள்ள ஆசிரியர் கல்விக் கழகத்தில் விரிவுரைஞராகப் பணிபுரிகிறேன். தற்சமயம் திரைப்பாடல் தொடர்பான  முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளேன். எனது ஆய்வுக்கு உங்கள் தரப்பில் இருந்து உதவி கிட்டுமா? ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினால் அதற்கு உண்டான செலவை ஏற்கவும் தயார். இயன்றால் பதில் அனுப்புங்கள். பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

    நன்றியுடன், கி.பழனிமலேசியா.

    From: தமிழ் இசை To: palani_5747@yahoo.com Sent: Sunday, August 14, 2016 2:12 AM Subject: [New post] கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி #yiv4388972627 a:hover {color:red;}#yiv4388972627 a {text-decoration:none;color:#0088cc;}#yiv4388972627 a.yiv4388972627primaryactionlink:link, #yiv4388972627 a.yiv4388972627primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv4388972627 a.yiv4388972627primaryactionlink:hover, #yiv4388972627 a.yiv4388972627primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv4388972627 WordPress.com | ஓஜஸ் posted: “நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.இளங்கலை பட்ட” | |

  3. ‘அழகே அழகே’

    ‘ஆனந்தயாழை மீட்டுகிறாய்’

    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

    ஆதலால்,

    ஒரு பாவலன் / கவிஞன்

    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

    ஆயினும்

    நாமும்

    துயர் பகிருகிறோம்!

பின்னூட்டமொன்றை இடுக