ஹே மிஸ்டர் மைனர் – காவியத்தலைவன்

இசையின் இன்பம் பரவட்டும்.

காவியத்தலைவன் பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன. பா.விஜய் எழுதிய பாடல் இன்று இசைப்பாவில். கொஞ்சும் காதல் பாடல், எதுகை மொவனை எல்லாம் எப்பொழுதும் போல அழகாக அள்ளி வீசியுள்ளார் கவிஞர். ரஹ்மான் இசை, அந்த காலத்தை சரியாக சித்தரிப்பதாக, youtube கமெண்ட்ஸ் சொல்லுகின்றன. பாடக்ர்களின் குரலில் ஒரு சின்ன துள்ளலும், இலையோடும் குறும்புத்தனமும் தெரிகிறது.

முதல் சில வரிகளையும் நல்ல தமிழில் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது. Skype மூலம் ரஹ்மான் இசையமைக்கிறார், iPad உதவி கொண்டு பாடகர் பாடுகிறார், கவிஞர் எழுதும் முதல் வரி ஆங்கிலம், இசை கருவிகள் எந்த நாட்டில் செய்யப்பட்டனவோ! ஆனால் இது ஒரு தமிழ் படம், நாம் தான் காசு கொடுத்து பார்த்து, அவர்களை வாழ வைக்க வேணும். நல்லா இருக்குல!| இந்த கதை எல்லாம் நமக்கு எதுக்கு, பாடல் நல்லா இருந்தா பேசாம ரசிக்க வேண்டியது தானே – உங்க Mind Voice கேக்குது!

kaaviya thalaivan siddarth

பாடல் : ஹே மிஸ்டர் மைனர்
படம் : காவியத்தலைவன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் : பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிசரண், சாஷா திருபாத்தி

ஹே மிஸ்டர் மைனர்
என்ன பார்க்குற
என் இரவுகுகளை
இம்சையாக்க நினைக்குற
காற்றின் காலில்
கொலுசு கட்டி அனுப்புற
காதலை கை
குலுக்கு இழுக்குற

ஹே மிஸ்டர் மைனர்…

என்னை உனக்கு
ரசிகனாக மாத்துறேன்
உன் அழகை தினமும்
நூறு மடங்கு கூட்டுறேன்
கண்கள் பட்டு போகும்
என்று நினைக்கிறன்

நெஞ்சிலே தங்கிக்
கொண்டு சிரிக்குற

ஹே மிஸ்டர் மைனர்…

ஆசைகள்
உன்னோட நெஞ்சை
தட்டி எட்டிப் பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது

பேசத்தான் நெஞ்சோடு
வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய்தாயேன்

இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நினைக்குதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனி துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் ஈரம்

ஹே மிஸ்டர் மைனர்…

என்னை உனக்கு…

என்னமோ என்னோடு
கிச்சு கிச்சு மூட்டி போகுது
கன்னம் பிச்சு போடுது

கன்னமோ கண்ணோடு முத்த
பிச்சை கேட்குது
தா உன் இதழ் தாயேன்

முதல் முறை
பரவுதே பரவசம்
கணம் கணம்
மலர்வனம் இவள் வசம்
இடைவெளி குறைந்த
பின் இதழ்ரசம்
கண் கவிழ்ந்த மையல்
போது நெஞ்சின் மீது

என்னை உனக்கு….

ஹே மிஸ்டர் மைனர்…..

மேலும் புதிய பாடல்களுடன் விரைவில் சந்திப்போம்.

ஒரு நிலா ஒரு குளம்

வணக்கம்.

காதல் பாடல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்னுமொரு இனிய பாடல். ஏற்கனவே மழையில் குளித்த மலர்வனம் பாடலைத் தந்தோம். அதே பாணியில் இன்னுமொரு காதல் பாட்டு. வித்யாசாகர்+பா.விஜய் கூட்டணியில்.

பாடகர்களும் சும்மா இல்லை. கார்த்திக், ஷ்ரேயா கோஷல். சற்றே பெரிய அணி இப்பாடலில் இணைந்திருக்கிறது.  பாடல் குறித்து கவிஞர் சொல்கிறார்..

”இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது  என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாடல்! எனவே இதை படமெடுக்க ரோம், வெனீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று  முடிவெடுத்தோம்.

பாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின!

ஆண்:     ஒரு நிலா.. ஒருகுளம்!
ஒரு மழை.. ஒரு குடை!
நீ‡ நான் போதும் ஒரு விழா!

பெண்:     ஒரு மனம்.. ஒரு சுகம்!
ஒரு இமை.. ஒரு கனா!
நீ ‡நான் போதும் ஒரு யுகம்! “

ஆம். ஹைக்கூ வடிவத்தை அடியொற்றி, சந்தச் சுவை கூட்டி, தமிழோடு விளையாடும் வார்த்தைக் குவியல்கள்தான் பாடல். பாடலுக்கேற்ற ஈர்ப்பைக் கொடுக்கிறது இசை. தெளிவாக வார்த்தைகள் விழுகின்றன. இதுவே பாடலைக் கேட்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது. வரிகளை வாசித்தாலே ஒரு உற்சாகம் பிறக்கும். யூட்யூப்-ல் இப்பாடலின் வீடியோவும் இல்லை! வழக்கம்போல் பாடலைக் கேட்டு ரசிக்க செவிகளைத் தயார்படுத்துங்கள்!

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்

நெடும்பகல்…. நீண்ட கனவு!
நிஜமாகுமா?

ஒரு நிலா ஒரு குளம்
ஒரு மழை ஒரு குடை
நீ..நான் போதும்
ஒரு விழா!

ஒரு மனம் ஒரு சுகம்
ஒரு இமை ஒரு கனா
நீ..நான் போதும்
ஒரு யுகம்!

ஒரு கணம் இரு இதழ்
ஒரு நிழல் இரு தடம்
நீ..நான் போதும்
ஒரு தவம்!
(ஒரு நிலா ஒரு குளம்..)

காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!

சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!

நீ..நான் போதும்
முதல் தனிமை!
(ஒரு நிலா ஒரு குளம்..)

மஞ்சம் கொஞ்சிய மன்மதம் நீ!
கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்!
மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ!
மௌனம் மலர்கிற கவிதை நான்!

ஓவியம் எழுதும் அழகியல் நீ!
உன்னை வரைகிற தூரிகை நான்!
உயிரை மீட்டிய விழிவிசை நீ!
உன்னுள் பூட்டிய இதழிசை நான்!

நீ..நான் போதும்
புது உணர்வு!

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

அனார்கலி..அனார்கலி..

இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம்,

                               காதல் என்றாலே தனி உலகமாக வாழும் காதலர்கள் தங்கள் காதலை ரசிப்பதும் அழகே அந்த வகையில் அனார்கலி பாடல் வரிகளும் இசை அமைத்த விதமும் மனதை கவர்ந்த வண்ணம் என்றே கூறலாம்.

                                 ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க பா.விஜய் அவர்களின் வரிகள் இணைந்து காதல் கசியும் அருவியாகவே பாடல் இருக்கிறது.பாடியவர்களின் மென்மைகலந்த குரலும் நம்மையும் காதல் வலைக்கு ஈர்ப்பது போன்று அமைந்து இருக்கிறது.

                                காதல் என்னும் அழகிய உலகிற்குள் சென்ற இரு மனங்கள் ஒருவரை ஒருவர் வருணித்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர் . ஒருவரை ஒருவர் ரசித்தும் தங்களின் அழகிய உணர்வுகளை பகிர்ந்தும் காதலில் கரைகின்றனர். காதலில் இணைந்த மனங்கள் தங்கள் முகவரியாக  இடமாற்றிக்கொள்கின்றனர், தத்தம் முகவரியாகவே ரசிக்கின்றனர்.

படம்: கண்களால் கைது செய்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் ,
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்

கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா

ஆனார்கலி…. ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சின்ஞ்சுற நதியும் நீயடி…
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…

ஆனார்கலி… ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
குளிர் காற்று நீ …நான் பாய்மரம்
நதி காற்று நீ நான் தாவரம்..
ஆனார்கலி…ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

இயந்திர மனிதரைப்போல் உன்னையும் செய்வேனே…
இருவிழி பார்வைகளால் உன்னையும் ரசித்தேனே

அழகிக்கு யெல்லாம் துணிவதிகம்
அழகியின் திமிரில் ருசியதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

நடைநடந்து போகையில்…நீ இலக்கணமே
நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமே
ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என்மனம் என்பதற்கு முகவரி நீத்தானே…
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீ தான்…
இரவுகள் தோன்றும் கனவுகெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீ தான்….
மழைத்துளிக்கு மேகமே முதல் வரி
உன்னிதழிலில் மௌனமே உயிர் வரியோ..

ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…