கயல் பாடல்கள் முழுவதும்

Kayal heroகயல் பாடல்கள் முழுவதும்

மீண்டும் அதே வெற்றி கூட்டணி – இமான் + யுகபாரதி + பிரபு சாலமன். கும்கி-யில் களமிறங்கி கலக்கியவர்கள், இந்த தளத்திலும் கும்கி தான் மிகப் பெரும் ஹிட் இன்றுவரை.

இதோ ’கயல்’ அனைத்துப் பாடல்களும்.

இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி

separator-notes

உன்ன இப்ப பார்க்கணும்

பாடியவர்கள்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்

உன்ன இப்ப பார்க்கணும்
ஒன்னு பேசணும்
என்ன கொட்டி தீர்க்கணும்
அன்ப காட்டணும்

உறவே… மனம் தேம்புதே .
உசிரே… தர ஏங்குதே.
நீ எங்கயும்
போகாத நான்
வாரேன் வாடாத !

உன்ன இப்ப…

இங்கே கடல்,
அங்கே நதி ,
இணைந்திட நடை போடுதே!
அங்கே வெயில்,
இங்கே நிழல்,
விழுந்திட இடம் தேடுதே!

தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .
வரியா விதி
என்னென்ன செய்திடுமோ ?
முடிவில் உயிர்
வண்ணங்கள் மாறிடுமோ ?

உன்ன இப்ப…

இங்கே உடல்,
அங்கே உயிர்,
இதயத்தின் வலி கூடுதே!
எங்கே நிலா என்றே விழி,
பகலிலும் அலைந்தோடுதே!

காயும் இருள் நானடி,
பாயும் ஒளி நீயடி.
கதிரே வந்து,
கண்ணோடு கலந்துவிடு.
கலந்தே இவன்
நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப…

 separator-notes


என் ஆள பார்க்கப் போறேன்

பாடியவர்கள்:  ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித்

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேசப் போறேன்…

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…
தர போறேன்!

எ ஆள….

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.

‘இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி,
காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே,
அழ போறேன்!

எ ஆள….

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!

புதுசா புளுகாம,
ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு
பொண் ஜாதியா
ஆக போறேன்னு ?  
அப்பாவியா
நானே… கேட்டு…
வர போறேன்!

என் ஆள
பார்க்க போறேன்…
பார்த்த செய்தி
பேசப் போறேன்…

 separator-notes

எங்க புள்ள இருக்க ?

பாடியவர்: பலராம்

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி

.
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி

அரிதான பொருளாக
தெரிந்தாயடி!
அடைக்காக்க தெரியாமல்
தொலைத்தேனடி!

எனக்குள்ளே புது
மூச்சை கொடுத்தாயடி.
சுழல் போல
அதை நீயே இழுத்தாயடி…

பொத்தி வச்ச
உன் நினைப்பு
பொத்திக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்டு ராட்டினமா
என மனசு சுத்தடி

இது ஏனோ தானே….
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி!

எனக்கான வரம் போல
பிறந்தாய்யடி
தவமேதும் புரியாமல்
கிடைத்தாயடி
இனிமேலும் இவன்
வாழ முடியாதடி
இறந்தாலும் உன்னை
தேடி அலைவேனடி

உன்ன இவன்
கண்ணின் முழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி
அப்படியே செத்திடவும்
தோணுதடி

இது ஏனோ தானோ…
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

separator-notes

பறவையாப் பறக்கிறோம்

பாடியவர்: ஹரிச்சரண்

பறவையாப் பறக்கிறோம்,
காத்துல மெதக்குறோம்,
போற வழியில,
பூக்களா சிரிக்கிறோம்!
எங்க ஊரு ஒலக,
ஊரா நினைக்கிறோம்!

ஏ வீடு வாசல் வீதி
ஒன்னும் வேணாம்!
ஏ காடு மேடு கடலத்
தாண்டி போவோம்!
சூரியன் போல
நாங்க சுழலுவோம்,
சோகம் வந்தா
குப்பையில வீசுவோம்!

பூமி பந்து மேல
ஒத்துயடி பாத போடுவோம்.
அந்த வானவில்லு,
எங்களுக்கு சோடி.
தினம் வட்ட நிலா,
கூட சில்லு ஆடி.
மேகம் ஏறி,
வெரசா நடப்போமே.
அந்த மின்னல் கொடிய,
கயிறா திரிப்போமே!

பறவையா…

ஏ ஆடு மாடு கோழி
எங்களுக்கு கூட்டு!
அத போல வாழ
தேவையில்ல நோட்டு!
கண்டத வாங்கி
சேர்க்க நினைக்கல!
ஒரு தந்திரம் போட்டு
ஊர கெடுக்கல!
நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்!
இந்த சின்னம்சிறு பிஞ்சு போல
உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவல கிடையாதே
நானா போற பாத
எதுவும் முடியாதே

பறவையா பறக்கிறோம்
காத்துல மெதக்குறோம்!

separator-notes

கூடவே வர மாதிரி

பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்

கூடவே வர மாதிரி
தெரியுதே யே யே….
நீ என்ன
சொல்ல போறியோ

ஈரகொல நடுங்குதே
மூச்சும் பேச்சும் ஒடுங்குதே .
காரமுள்ள காத்தடிக்க
கண்ணுமுழி பிதுங்குதே
கலங்குதே கலங்குதே

ஓ… ஓ… ஓ….
தாரரா ஆ… ஆ…
நீ என்ன
சொல்ல போறியோ
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

separator-notes

எங்கிருந்து வந்தாயோ


பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 

எங்கிருந்து வந்தாயோ?
எதற்க்காக வந்தாயோ?
என்னமோ சொன்னையே…
கத பேசி போனாயே…
அதை நானும்
அறியும் முன்னே
நீயும் மறைந்தாயே
மெல்ல காற்றில்
கரைந்தாயே…..

எங்கிருந்து….

வாச தண்ணி தெளிக்கையில,
வந்து நீயும் நனைக்கிறியே.
துணிமணிய தொவக்கையில,
என்ன நீயும் புளியிறியே.
ஆய்ஞ்சு வச்ச கீர போல,
நினைப்புல நீ கடையிறியே.
அம்மி நச்ச தேங்கா சில்லா,
அடி மனச நசுக்கிறியே!
அட நீயும் மறைந்தாயே…
காற்றில் கரைந்தாயே…

எங்கிருந்து வந்தாயோ…

நடக்கையில தொடர்ந்து வர,
நடு நடுவே மறைஞ்சுடுவ!
தலை முடிய ஒதுக்கையிலும்,
வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,
கழுவி விட மனமில்லையே!
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,
ஒதர ஒரு வழியில்லையே!
அட நீயும் மறைந்தாயே…
மெல்ல காற்றில் கரைந்தாயே…
உயிரோடு உறைந்தாயே…

எங்கிருந்து……..

 separator-notes

டிய்யாலோ டிய்யாலோ

பாடியவர்: ஒரத்தநாடு கோபு

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியா காதல் வச்சான்
அழுமூஞ்சியா போனான் மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழிமேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்
அவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விழஞ்சான்
அத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்

டிய்யாலோ…..

கரையேறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழிவாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம
அப்போ நான் திருஞ்சேன்
வழி இல்லாம
இப்போ இங்க ஒரஞ்சேன்
விதி பந்தாட
காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம
சொட்டுசொட்டா கரஞ்சேன்

டிய்யாலோ….

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகமெல்லாம்
மறஞ்சே தான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும் போது ஆனந்த சாரல்
வழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்
இது உசிரோட ஓயாத தேடல்
அட ஒரு போதும் கெட்டதில்ல காதல்

வருவாடா….

டிய்யாலோ…

 separator-notes
மற்றுமொரு பதிவில் விரைவில் இணைகிறோம்.

டிய்யாலோ டிய்யாலோ – கயல்

இசையின் இன்பம் பரவட்டும்

கயல் படத்தின் இறுதிப் பாடலை, இசைப்பாவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாட்டுப்புற வாசம் வீசும் பாடல். மைனா-வில் பாடிய அந்தோணி தாசன் என்று நினைத்தேன், அவர் இல்லை. ஒர்த்தநாடு கோபு கலக்கியுள்ளார். காதல் என்னும் மரம் வளரும் பருவங்களை படம் பிடித்துள்ளார், யுகபாரதி. அந்த மரத்தின் இலையுதிர் காலம் தான் இந்த பாடல், நண்பர்களின் கூற்றாக அமைகிறது. ஆடவைக்கும் இசை தந்துள்ளார் இமான். இடையில் வரும் கௌண்டர் குரல் தான் இந்த பாடலின் highlight !

kayal diyaloo song

பாடல்: டிய்யாலோ டிய்யாலோ
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஒரத்தநாடு கோபு
படம்: கயல்

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியா காதல் வச்சான்
அழுமூஞ்சியா போனான் மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழிமேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்
அவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விழஞ்சான்
அத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்

டிய்யாலோ…..

கரையேறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழிவாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம
அப்போ நான் திருஞ்சேன்
வழி இல்லாம
இப்போ இங்க ஒரஞ்சேன்
விதி பந்தாட
காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம
சொட்டுசொட்டா கரஞ்சேன்

டிய்யாலோ….

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகமெல்லாம்
மறஞ்சே தான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும் போது ஆனந்த சாரல்
வழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்
இது உசிரோட ஓயாத தேடல்
அட ஒரு போதும் கெட்டதில்ல காதல்

வருவாடா….

டிய்யாலோ…

கயல் படத்தின் பாடல்களை ரசிக்க சொடுக்கவும்.

எங்கிருந்து வந்தாயோ – கயல்

இசையின் வணக்கம்

பக்கத்தில் இல்லாத நாயகனை நித்தம் நித்தம் நினைவில் கொள்கிறாள் பைங்கிளி. செய்யும் காரியங்கள் யாவும் அவனை கண் முன் கொண்டு வருகிறது… ஒரு விதமான பிரம்மை, மன அழுத்தம். ஏக்கத்தில் ஷ்ரேயா மிளிற, மெல்லிய இசையில் இமான் வருட, சின்ன சின்ன விஷயங்களில் சிலிர்க்க வைக்கிறார் யுகபாரதி.

kayal herione

பாடல்: எங்கிருந்து வந்தாயோ
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
படம்: கயல்

எங்கிருந்து வந்தாயோ?
எதற்க்காக வந்தாயோ?
என்னமோ சொன்னையே…
கத பேசி போனாயே…
அதை நானும்
அறியும் முன்னே
நீயும் மறைந்தாயே
மெல்ல காற்றில்
கரைந்தாயே…..

எங்கிருந்து….

வாச தண்ணி தெளிக்கையில,
வந்து நீயும் நனைக்கிறியே.
துணிமணிய தொவக்கையில,
என்ன நீயும் புளியிறியே.
ஆஞ்ச வச்ச கீர போல,
நினைப்புல நீ கடையிறியே.
அம்மி நச்ச தேங்கா சில்லா,
அடி மனச நசுக்கிறியே!
அட நீயும் மறைந்தாயே…
காற்றில் கரைந்தாயே…

எங்கிருந்து வந்தாயோ…

நடக்கையில தொடர்ந்து வர,
நடு நடுவே மறைஞ்சுடுவ!
தலை முடிய ஒதுக்கையிலும்,
வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,
கழுவி விட மனமில்லையே!
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,
ஒதர ஒரு வழியில்லையே!
அட நீயும் மறைந்தாயே…
மெல்ல காற்றில் கரைந்தாயே…
உயிரோடு உரைந்தாயே…

எங்கிருந்து……..

நல்ல நல்ல பாடல்களுடன் இணைவோம்.