மனசுல சூறக்காத்தே…

இசை பெருகட்டும், இன்பம் பொங்கட்டும். வணக்கம்.

பல புதிய பாடல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதில் எங்களுக்கு பிடித்தவற்றை உங்களுக்கு பரிந்துரை செய்து மகிழ்கிறோம். மீண்டும் குக்கூ பாடல்களுக்கு வருவோம். ஏற்கனவே வெளிவந்த பாடல் -> கோடையில மழப் போல.. இன்று ஒரு காதல் ரசம் ததும்பும் காவிய பாடல்.

படத்தின் பெயர் போலவே பாடல்களும் அதி அற்புதம். இந்த பாடல் தான் ஆல்பத்தின் ஆகச்சிறந்த மெலடியாக இருக்கக்கூடும். திவ்யா ரமணி அவர்களின் குரல் பாந்தமாகவும், ஆழமான உணர்வுகளுடன் ஒலிக்கிறது, காற்று என்னும் பாடும் போது, ஒரு வித நளினம் வெளிப்டுகிறது. இரயிலில் பயணம் செய்யும் காதல் குயில்கள் பாடும் கீதம். யுகபாரதியின் வரிகள், காதலை சரியாக பிரதிபலிக்கின்றது, தேவையான அழுத்தத்துடன்.  புல்லாங்குழலில் வரும் நடு இசைகள், மனதினுள் சென்று பாய்கிறது. பாடலின் சிறப்பு அம்சம் : பல கருவிகளின் இசை ஒன்றன் மீது ஒன்று அலைபாய்ந்து நமக்குள் அமைதி தருகிறது.

படம் : குக்கூ
பாடல் : மனசுல சூறக்காத்தே
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடியவர்கள் : ஆர் ஆர், திவ்யா ரமணி
இசை : சந்தோஷ் நாராயணன்

மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து
மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து

நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும்
காதிலே கேட்குதே
உந்தன் வாசனை
வானவில் காட்டுதே

தாரத்தா தரரர…

வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய் முகம்

ரகசிய யோசனை
கொடுத்தே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுடச் சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே

கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

தனனானா தனனானா தானானா
தனனானா நனனானா நனானா

ஆனந்தம் பெண்னாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ண
குயில் போல கூவுதே

கை தொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பபே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே

எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூறக்காத்தே

இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டு இருக்கும் இந்த தருணம், இசைப்பாவில் ஒரு வரலாறு -> 55,555 ++ பார்வைகள் தாண்டி, இசை வெள்ளத்தை, இந்த புவியெங்கும் பாய செய்துள்ளோம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இசைப்பா 55555++ பார்வைகள்
இசைப்பா 55555++ பார்வைகள்

எல்லாம் உங்கள் ஆதரவு தான், மீண்டும் ஒரு இனிய பாடலுடன், இசையில் இணையும் வரை இன்பத்தில் இணைவோம்.