டிய்யாலோ டிய்யாலோ – கயல்

இசையின் இன்பம் பரவட்டும்

கயல் படத்தின் இறுதிப் பாடலை, இசைப்பாவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாட்டுப்புற வாசம் வீசும் பாடல். மைனா-வில் பாடிய அந்தோணி தாசன் என்று நினைத்தேன், அவர் இல்லை. ஒர்த்தநாடு கோபு கலக்கியுள்ளார். காதல் என்னும் மரம் வளரும் பருவங்களை படம் பிடித்துள்ளார், யுகபாரதி. அந்த மரத்தின் இலையுதிர் காலம் தான் இந்த பாடல், நண்பர்களின் கூற்றாக அமைகிறது. ஆடவைக்கும் இசை தந்துள்ளார் இமான். இடையில் வரும் கௌண்டர் குரல் தான் இந்த பாடலின் highlight !

kayal diyaloo song

பாடல்: டிய்யாலோ டிய்யாலோ
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஒரத்தநாடு கோபு
படம்: கயல்

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியா காதல் வச்சான்
அழுமூஞ்சியா போனான் மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழிமேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்
அவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விழஞ்சான்
அத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்

டிய்யாலோ…..

கரையேறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழிவாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம
அப்போ நான் திருஞ்சேன்
வழி இல்லாம
இப்போ இங்க ஒரஞ்சேன்
விதி பந்தாட
காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம
சொட்டுசொட்டா கரஞ்சேன்

டிய்யாலோ….

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகமெல்லாம்
மறஞ்சே தான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும் போது ஆனந்த சாரல்
வழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்
இது உசிரோட ஓயாத தேடல்
அட ஒரு போதும் கெட்டதில்ல காதல்

வருவாடா….

டிய்யாலோ…

கயல் படத்தின் பாடல்களை ரசிக்க சொடுக்கவும்.