தாயும் கொஞ்ச காலம்…

வைரத்தின் வரிகளுடன், வந்தனம் !

இன்று தனது அறுபதாம் பிறந்தநாளை தமிழ் நடையுடன், கோவையில் துவங்கி உள்ளார் கவிஞர் வைரமுத்து. சிவானந்தா காலனி முதல் காந்திபுரம் வரை சென்ற பேரணியில் : கல்லூரி மாணவ மாணவிகள், அறிஞர்கள், படைப்பாளிகள், சர்வ சமயத்தை சார்ந்த பெருமக்கள், சகல சமூகத்தை சார்ந்த பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் காதலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் நடையின் நோக்கம், மூன்று அம்ச கோரிக்கை :

  • தமிழ்நாட்டு எல்லைக்குள் இயங்கும் எல்லா பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக, கற்பிக்கபட வேண்டும்.
  • நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக திகழவேண்டும். துணைக் கோரிக்கை : மத்திய அரசின், தமிழ்நாட்டில் இயங்குகின்ற எல்லா அலுவலகங்களிலும் தமிழ் பயன்படுத்துபட வேண்டும்
  • திருக்குறள் மதசாரப்பற்றது,மனித நேயம் மிக்கது. எனவே அதை தேசிய நூலாக விளங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்

vairamuthu 60

பாடலின் பக்கம் திரும்புவோம். தத்துவங்களை அள்ளி அள்ளி தூவுவதில் வல்லுனர் வைரமுத்து. (பெற்ற அனுபவங்கள் இன்னும் நாற்பது வருடங்களுக்கு போதும் என அவரே சொல்லியுள்ளார் !) சமீபத்தில் வெளிவர உள்ள கங்காரு படத்தில் இப்படி ஒரு பாடல் உள்ளது. மொத்தமும் விரக்கிதில் தோய்ந்த நாயகனை நோக்கி பாட படும் பா. அழுத்தமான தத்துவ பாடல், வாழ்வின் நிலையாமை பற்றிய பாடல்.

அலட்சியமான தொனியில் ஆயிரம் கருத்துகளை சொல்லுகிறது. மிதப்பான ஒரு ஞானி பாடும் கீதம். அழுத்தமே இல்லாத இசை. படிப்படியாக வயதுடன் கூடிய சுய மதிப்பு. சோகத்தை குழைத்து தெளிக்கும் உணர்வு. மெல்லி பீட்ஸ். வைரமுத்து சொன்னது போல : ஒரு பனித்தரையில் ஆப்பிள் வழுக்கி லாவகமாக போகிற மாதிரியான குரல். பாடியவர், “ஊதா கல ரிப்பன்” புகழ் ஹரிஹரசுதன். அட்டகாசமான இசையை முதல் படத்திலேயே, தேனாய் பொழிந்துள்ளவர் : பாடகர் ஸ்ரீநிவாஸ்.

இந்த பாடலின் காணொளி மட்டும் வெளிவந்துள்ளது. (கீழே இணைப்பு உள்ளது.) தம்பி ராமையா முழுவதும் ஆடிய முதல் பாடல் இதுவாக தான் இருக்கும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

vairamuthu handwriting

படம் : கங்காரு
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ்
பாடல் : தாயும் கொஞ்ச காலம்…
பாடியவர் : ஹரிஹரசுதன்

கருவழியா வந்ததெவும்
நிரந்தர மில்ல !
கட்டையில போகுறவரையில்
சுதந்திர மில்ல !
இங்கு சுதந்திரமில்ல !
ஏதும் நிரந்தரமில்ல !

தாயும் கொஞ்ச காலம்,
தகப்பனும் கொஞ்ச காலம்.
ஊரும் கொஞ்ச காலம் – அந்த
உறவும் கொஞ்ச காலம்.

தாயும்…

நெனச்சு நெனச்சு பார்த்தாக்கா
நீயும் கொஞ்ச காலம்
உன் நெனபும்
கொஞ்ச காலம்

சரித்துரத்து மன்னர்களும்
கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரனும் சூரியனும்
இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்

தாயும்…

எட்டாத மல மேல
கடவுள் இருக்குது
அத எட்டிவிட மனுசபய
இதயம் துடிக்குது

சொந்தம் பந்தம் கூடி வந்து
காலை இழுக்குது
அட சொத்து பத்து ஆச வந்து
கைய அமுக்குது

காம வேரு கடைசிவரைக்கும்
கழுத்த பிடிக்குது….
இது கடவுள் கிட்ட போற
வழி எங்க இருக்குது ?

கட்டயில போற வரையில்
சுதந்திரம் இல்ல
தெரு வழியா வந்த ஏதுவும்
நிரந்திரம் இல்ல

முப்பதுக்கு மேல உனக்கு
முடி உதிருது – அட
நாப்பதுக்கு மேல பார்வ
நடுக்கமாகுது
அம்பதுக்கு மேல பல்லு
ஆடி போகுது – அட
அறுபதுக்கு மேல ஆண்ம
அடங்கி போகுது

ஒடம்போட பொறந்ததெல்லாம்
உன்ன பிரியுது… – இதில
உன் கூட பிறந்ததுவா
இருக்க போகுது ?

கட்டயில போற வரையில்
சுதந்திரம் இல்ல
தெரு வழியா வந்த ஏதுவும்
நிரந்திரம் இல்ல
தாயும்…

மேலும் பல சிறப்புப் பாடல்களுடன், உங்களை சீக்கிரம் சந்திக்கிறோம். தமிழ் வாழ்க ! இசை வாழ்க !

vairamuthu click