அழகான ராட்சசியே…

இசை வணக்கங்கள்,
                         மீண்டும் வைரமுத்து வாரம் தொடர்கிறது. இன்றைக்கு(ம்) அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரபலமான பாடலை காணவிருக்கிறோம். பாடல் இடம் பெற்ற படம் முதல்வன். பாடல் -“அழகான ராட்சசியே“. வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக அமைத்து இருக்கும்.
vairamuthu 60
இப்பாடல் அதிகம் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகமான ரீதிகௌளையில் அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஹரிணி ஆகியோரின்  குரலால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.காதலன் தன் காதலை அழகுற காதலியிடம் கூறுகிறான்.தன் காதலை கேள்விகளுடனே கேட்டு காதலனை காதல் கொள்கிறாள் காதலி. சில பாடல்கள் செவியில்  கேட்க கிடைக்கும் உணர்வு எழுத்துகளில் அமைவது கடினம் .அந்த வகையில் இந்த பாடலை சேர்க்கலாம்.பாடலை இசையுடன் ரசிக்கலாம் வாருங்களேன்.
படம் : முதல்வன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்புரமணியம்,ஹரினி

 

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே…
 

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா  ?அடுக்குமா ?

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா


கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே…

அழகான ராட்சசியே
அடினெஞ்சில் குதிக்கிறியே…

சூரியன ரெண்டு துண்டு செஞ்சு
கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ

சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச
பெண்ணிவளோ ஓ ஓ

ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி
மையிடவோ அஹா ஓ

மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக்
கைதட்டவோ ஓ ஓ

துருவி என்னத் தொலச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா…

தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா…

தூங்கும் தூக்கம் கனவா ?

கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே…
அழகான ராட்சசியே
அடிநெஞ்சில் குதிக்கிறியே…

முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே 

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)

தேன் கூட்டப் பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா?  அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக்
கட்சி மாறும் காரியமா? ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா
ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ

நான் நடக்கும் நிழலுக்குள்ள
நீ வசிக்க சம்மதமா?..


நீராக நானிருந்தால் – உன்
நெத்தியில நானிறங்கி

கூரான உன் நெஞ்சில் – குதிச்சி
அங்க குடியிருப்பேன்

ஆணா வீணா போனேன்….
(கோரஸ்)
கிளியே… ஆலங்கிளியே…
குயிலே… ஏலங்குயிலே..
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே…


அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா  ?அடுக்குமா ?

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா

 

 மேலும் இனிமையான  பாடலுடன் மீண்டும் சிந்திப்போம்..

 

vairamuthu click

 

அன்பே அன்பே, எல்லாம் அன்பே….

வணக்கம்.

பாடல் இடம்பெற்ற படம் ’இது கதிர்வேலன் காதல்’. ஒரு மென்மையான சோக பாடல். வரிகளில் பெரும் அட்டகாசம் இல்லை என்றாலும்… இசையும் பாடிய விதமும், இழையோடும் சோக மெட்டும், மனதை வருடுகின்றன. ஹரிணியின் குரலில் இருக்கும் depth மிக அபூர்வம். அந்த உணர்வை, மெல்லிய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் கை தூக்கி விட்டிருப்பது – நேர்த்தி. எங்கோ கேட்டு பழக்கம் உள்ள மெட்டாக இருந்தாலும் பாடல் ஈர்க்கிறது.

காதலன் காதலியின் பிரிவை, சின்ன சின்ன சம்பவங்களாக புது கவிதை (வசனம், கதை சொல்வது) போல சித்தரித்திருப்பது அழகு. வரிகள் ஒவ்வொன்றும் காட்சியை அழகாக காட்டுகிறது. இயக்குனருக்கு வேலை மிச்சம். தார தப்பட்டை எல்லாம் வைத்து கிழிக்காமல், இப்படி அமைதியாக சோகத்தை சொல்வது அலாதியான உணர்வலைகளை ஏற்படுத்துகின்றது. வைரமுத்து ராஜா/ரஹ்மான் போல – தாமரை + ஹாரிஸ் வலுவான வெற்றி கூட்டணி !

பல இசைகளை சார்ந்தது ஹாரிஸ் ஜெயராஜின் இசை என்பது பலரின் கருத்து (/குறை). என்னை பொருத்த மட்டில் கேட்க இனிமையாக இருந்தால், திரும்ப கேட்க முடியுமானால் பாடல் சூப்பர் தான் !

படம் : இது கதிர்வேலன் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமாரை
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி

(ஆண்)
அன்பே அன்பே
எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைகாலம் மட்டும்
கண்ணில் வேணாடம் என்பேன்
பணிக்கலாம் போர்வைக்
கொண்டு வந்தேன்

ஓ அன்பே அன்பே….

(பெண்)
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள நீ தான்
நிலாவை காட்டி தேற்றினாய்

அன்பே அன்பே….

(பெண்)

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழியில்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன்போல் தீயில்லி

(ஆண்)

மழை தரும் கார்முகிலே – நீ
மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே – நீ
ஒளிதரும் இன்னிசையே

(பெண்)
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரிகிரதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

அன்பே அன்பே….

(ஆண்)
உன்னை பார்க்க கூடாது
என் கண்ணி மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

(பெண்)
உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு ?

(ஆண்)
உடைகளின் நேர்த்தியினால் இந்த
உலகினை வென்றவள் நீ !
சிறு உதட்டின் புன்னகையினால் என்
இதயத்தில் நின்றவள் நீ !

அன்பே அன்பே….

மேலும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் வருகிறோம். இசை பூமியை ஆளட்டும் !

உன் பார்வை போதும்

ஒரு பெண் தாயாகும், சமயத்தில் முழுமை பெறுகிறாள் என்பது சமூக கோட்பாடு. உண்மையும் அதுவே. அப்படி ஒரு தாய் தான் சுமந்தெடுக்கும் பிள்ளை, எப்படி இருந்தாலும்,  அவளுக்கு அவன் தங்கக் கட்டியே. அவனுக்கு எவ்வகை துயரம் வந்தாலும், அவள் ஆவலுடன் அவன் முகம் பார்த்து அவனை தழுவுகிறாள்.

விண்மீன்கள் படம். இதே போல ஒரு சூழல். பிறந்து குழந்தை மாற்று திறனாளி, அவனால் நடக்கவோ, பேசவோ, ஏதும் சுயேச்சியாக செய்ய முடியாது. மருத்துவர்கள் அவனை காப்பகத்தில் சேர்த்து விடும் படி சொல்லியும், தன் மகன் தோன்றக் காரணமாக இருந்த, தாங்களே அவன் வேர் ஊன்று நிற்க பாடுப்பட வேணும் என உணரும் பெற்றோர். இதில் விந்தை ஒன்றும் இல்ல, நம் கலாச்சாரம் தான் அது !

என்ன தான் மன திடம் இருந்தாலும், மகவின் குறை எண்ணி மனம் துடிக்க, ஒவ்வொரு இரவிலும், அவன் நிறைகளை மட்டுமே பார்க்கும் / பாரக்க துடிக்கும் தாயின் அன்பு வரிகளை, தானாக வரும் உணர்வுகளை, மிகவும் சரியாக, ரசனையுடன் எழுதியுள்ளார் நா.முத்துக்குமார். வரிக்கே ஏற்ற வேகத்தில் இசை சரியா வந்துள்ளது. பாடியவர்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்ல : ஹரிஹரன், ஹரினி. இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. பாடல் முடியும் போது இரு துளி கண்ணீருடன் நீங்கள் இருப்பீர்கள் என்பது திண்ணம். அதுவே பாடலின் மிக பெரும் வெற்றி

பாடல் : உன் பார்வை போதும்

பாடியவர்கள் : ஹரிணி, ஹரிஹரன்

பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

படம் : விண்மீன்கள்

இசை : ஜூபின்

Vinmeengal-Stills-077

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

வாய் பேசா பந்தமே
வரம் தந்த தெய்வமே
உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது
நெஞ்சுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உன் முகம் பார்த்தால் ஓவியம் போலே
சலனங்கள் எதுவும் அதில் இல்லையே
மௌனமாகவே ஏதேதோ பேசி போகிறாய்

உன் மனம் என்றும் ஊஞ்சலை போல
இடம் வளம் எதுவம் அதில் இல்லையே
திசைகள் யாவையும் ஒன்றாக்கி மாயம் செய்கிறாய்

பூமி உந்தன் சொந்தமே,
வானம் உந்தன் சொந்தமே
வெல்லுகின்ற காலம்
வாசல் வந்த மாலையிடும்

மண்ணுள் உள்ள வாழக்கை என்றும்
மேடு பள்ளம் நிறைந்தது
துன்பமின்றி இன்பம் மட்டும்
உனக்கென்ன பிறந்தது

மெல்ல மெல்ல உதடுகள்
புன்னகையில் மலர்ந்தது
என்னை விட்ட உன்னை தானே
எந்தன் மனம் நம்புதடா

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

நதிகளில் விழுந்த இலைகளின் பயணம்
நதி செல்லும் வழியில் தொடருமடா
அன்புன் நதியிலே இப்போது
மோதி இலைகள் ஆகிறோம்

அலைகளில் மிதந்து ஆழத்தில் அலைந்து
அனுதினம் ஆட்டம் நிகழுதடா
கொஞ்சும் போதிலே ஒன்றாகி
கடலில் சேர்கிறோம்

என்னை நானே பார்கிறேன்
இன்னும் என்ன கேட்கிறேன்
இந்த இன்பம் போதுமடா

என்ன என்ன வேண்டும் என்று
பார்த்து பார்த்து கொடுக்கிறேன்
உன்னை தீண்டும் காற்றை கூட
கையை நீட்டி தடுக்கிறேன்

உன்னை தோளில் தூக்கி கொண்ட
வானம் மேலே பறக்கிறேன்
உந்தன் வெற்றி அதை என்னை
காயங்களை மறக்கிறேன்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது

கண்ணுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

மேலும் இசை வளரட்டும். இன்பம் பெருகட்டும். உங்கள் வாசிப்புக்கும் நன்றி !