செல்பி புள்ள… – கத்தி

இனிய வணக்கம்.

கத்தி படத்தின் பாடல்கள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. முதலில் வெளிவந்த பாடலை கடைசியில் இங்கே பதிவு செய்கிறோம். விஜய் அவர்களே பாடிய பாடல். கார்கி அவர்களின் கலக்கல் வரிகள். ஆங்கிலத்தை அள்ளி தெளித்து, அனைவரையும் கவருவது என்ன வகை யுக்தியோ தெரியவில்லை. (எனக்கு இது சற்றும் பிடிக்கவில்லை)

Selfie – தன்னை தானே புகைப்படம் பிடித்துகொள்வது. போன வருடம் oxford dictionary, உலகில் மிகவும் பயன்படுத்தப்பட்ட வாரத்தை இது தான் என அங்கீகாரம் செய்தது. வெகுஜென பழக்கத்தில் வெகு பிரபலமான சொல்.

படத்தில் சம்பந்தமே இல்லாத இடத்தில் இந்த பாடல் வருகிறது. நாயகி காதலை சொல்கிறாள். அப்ப வருகிறது. இன்னும் சிறப்பாக யோசித்து, அருமையானதொரு melodyடியை தந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் : Let’s take a selfie புள்ள
படம் : கத்தி
இசை : அனிருத்
பாடலாசிரியர் : கார்கி
பாடியவர் : விஜய்

Tera Tera TeraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ
பண்ணா ஏறும் கிறுக்கு

Tera Tera….

Instagramத்துல
வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம்

நானும் நீயும் சேரும் பொது
தாறுமாறு தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும்
Like-உ Share-உ தான்

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Photoshop பண்ணாமலே
Filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது

டப்பாங்குத்து பாட்டும் இல்ல
டன்டனக்கு Beat-உம் இல்ல
உன்னை பாக்கும் பொதே
ரெண்டு காலும் துள்ளுது

அ குச்சி ஐஸ்சும் இல்ல
அல்வாவும் இல்ல
உன் பேர் சொன்னா
நாக்கெல்லாம் தித்திக்குது

அட தண்ணிக்குள்ள
நான் முங்கும்போதும்
உன்னை நெனைச்சாலே
எங்கெங்கோ பத்திக்குது

வெரலுக்கு பசியெடுத்து
உயிர் துடிக்க
உள்ள நாக்க வச்சி
உன்னை கொஞ்சம் அது கடிக்க

உதட்டுக்கு பசியெடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு
தாயேன் நானும் படம் பிடிக்க

Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா

Selfie புள்ள Give me a உம்மா

காலையில காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன்நிலவு
போனா வரியா ?

தேகத்துல சாக்லெட்டு நான்
வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டென்ட் அடிப்போம்
Are you ready-யா?

அட ராக்கெட் உன்ன
நீயும் ரெண்ட் பண்ண
அந்த Jupiter-ல் Moon-உ
மட்டும் அறுபத்திமூனு

அந்த நிலவுங்க எல்லாம்
இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டும் போதாதா ?
வாடி புள்ள

Tera Tera….

Instagramத்துல….

Let’s take a Selfie புள்ள….

இனிய பாக்களுடன், விரைவில் இணைவோம்.

 

பக்கம் வந்து, கொஞ்சம் முத்தங்கள் தா – கத்தி

இசையின் இன்ப வணக்கம். அனிருத்தின் இசை மழையில் இன்றும் கத்தி சகிதம் நனையலாம் வாருங்கள். ஹிப் ஹாப் இசை வடிவில், ஒரு துள்ளலான தமிழ் பாடல். மொழியின் தனி அழகு, எந்த வித வெளிநாட்டு இசைக்கும், இலகுவாக பொருந்துகிறது. வரிகளை எழுதி, பாடியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா. வித்தியாசமான பாடல், கேட்டு பாருங்கள். பிடித்திருந்தால் நலம் J

பாடல்: பக்கம் வந்து….
படம்: கத்தி
இசை: அனிருத்
பாடலாசிரியர்: ஹிப் ஹாப் தமிழா
பாடியவர்கள்: அனிருத், ஹிப் ஹாப் தமிழா

Kaththi Movie Stills

You know what
Guess who’s back
We back baby
We back,
We back,
We back back back

ஆ.. பெண்ணே பார்
ஆ.. ஒரு முத்தம் தா
ஆ… இந்த பக்கம் வா
ஆ.. என்னை இணைத்திட வா ஆ..

பெண்ணே வச்ச முத்தம் போதுமா?
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா?

அடி என்னவென்று சொல்லம்மா?
என் நெஞ்சம் துடிக்குது
உன்னை நினைத்திட!
கைகள் பிடித்திட மனசுக்குள்
துடிக்குது உண்மைதான்

பைத்தியம் பிடிக்கிது
வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்

பெண்ணே எந்தன்
உலகம் நீதான்
நான் அந்த நிலவைப்போல்
சுற்றி வரவா

உன்னை நினைத்து பார்க்க
உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று
தந்துவிட்டால் முக்தியடைவாய்

விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது
போலே நான் உன்மீது கொண்டிடவா

உன்னை முத்தங்கள் இட்டு
பின் வெட்கத்தில் விட்டுத்தான்
மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா

உன்னை பார்த்தாலே போதுமே
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும்
பிறந்துன்னை சேர்ந்திடுவேன்

என்னை பார்க்காமல் போகாதே
நெஞ்சம்தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா

உந்தன் கண்கள் என்னை கண்டதும்
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா

அடி போனது போகட்டும்
காயங்கள் ஆறட்டும் எப்போதும்
நான் உன்னை கனவில் பார்க்க

ஆசைகள் வந்திடும்
ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த
பாட்டை நீ கேட்க

முகத்தில் இருக்கும் சிரிப்பு
அடி உள்ளுக்குள் என்னடி மொறப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து

என்னைத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தென்னை தாக்க
மீண்டும் நான் உன்னையே பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே..
உலகம் மறந்ததே…
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே

அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது

அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம்
சட்டென நீ பறித்தாய் உன்னை
மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே
ஒரு பொன்னை தேடி
நான் தொலைஞ்சேன்

மனமே மனமே
அட காதலால
நான் கரைஞ்சேன்

மனமே மனமே
ஒரு பொன்னை தேடி
நான் தொலைஞ்சேன்

மனமே மனமே
அட காதலால
நான் கரைஞ்சேன்

பக்கம் வந்து….

மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே

அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது

அடியே இப்போ ஏன் சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்

உன்னை மட்டும் எந்தன்
நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே
ஒரு பொண்ணே தேடி
நான் தொலைஞ்சேன்

மனமே மனமே
அட காதலால
நான் கரைஞ்சேன்

மனமே …

Im out of here

இனிய பாடலுடன் சீக்கிரம் சந்திப்போம்

ஆத்தி என, நீ பாத்தவுடனே… – கத்தி

நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபவாளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பல தடைகளை தாண்டி, கத்தி படம் சிறப்பாக வெளிவந்து ஓடிக்கொண்டிருகிறது. நல்ல விமர்சனங்கள் வந்து வண்ணம் உள்ளன. நாம் – ஆத்தி என நீ, பாடலை கவனிப்போம்.

Typical Anidrudh Style, என்று சொல்லலாம். மூன்றில் இருந்து ஏதாவது ஒரு பாடல் இதே மாதிரி உள்ளது. மான் கராத்தே படத்தில் வரும் “உன் விழிகளில்” பாடலை போன்றே இந்த பாடலும் உள்ளது. மெல்லிய ஆரம்பம், இனிய இசை, அழகாக ஆடவைக்கும் இடையிசை. கோரஸ்-சில் ஒரு அழுத்தமான வரி என்று பல ஒத்துமைகள் சொல்லலாம், இரண்டுக்கும்.

யுகபாரதி எல்லா வகையான இசைக்கும் அசால்ட்டாக, எளிய தமிழில், உணர்சிகளை ஓவியமாக்குகிறார். எதுகை, மொவனை எல்லாம் முடிந்த இடங்களில், சிறப்பாக செயல்படுத்துயுள்ளார். இந்த வரி வித்தியாசமாக அமைந்துள்ளது.

பார்வையில வாசனைய,
தூவிடுற வசமாக!

காதல் பித்தி தலைக்கு ஏறினால், இப்படி எல்லாம் எதவாது தோணும் போல. வாருங்கள் பாடலை கேட்கலாம்.

பாடல் : ஆத்தி என நீ
படம் : கத்தி
இசை : அனிருத்
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடியவர்கள் : அனிருத், விஷால் டட்லானி

Kaththi

Feel like Im Falling
Falling high
Oh my god,
go…

ஆத்தி என, நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்.
காட்டு மரமா வளர்ந்த இவனும்,
ஏத்தி வச்ச மெழுகானேன்.
கோர புல்ல ஓர் நொடியில்,
வானவில்லா திரிச்சாயே.
பாறை கல்ல ஒரு நொடியில்,
ஈர மண்ணா கொழைச்சாயே.

ஊரு அழகி, உலக அழகி,
யாருமில்ல உனபோல,
வாடி நெருங்கி பாப்போம் பழகி……

உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும்
மருகுதே, உருகுதே!

உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும்
சிதறுதே, பதறுதே !

உன் அழகில்…
உன் வழியில்…
உன் அழகில்…
உன் வழியில்…

சாமி சிலை போலே பிறந்து.
பூமியிலே நடந்தாயே.
தூசியென கண்ணில் விழுந்து,
ஆறுயிர கலந்தாயே.
கால் மொளச்ச ரங்கோலியா,
நீ நடந்து வாரே புள்ள.
கல்லு பட்ட கண்ணாடியா,
நான் உடைஞ்சு போறேன் உள்ள!

ஜாடையில தேவதையா,
மிஞ்சிடுற அழகாக.
பார்வையில வாசனைய,
தூவிடுற வசமாக!

ஊரு அழகி, உலக அழகி,
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி, பாப்போம் பழகி…

ஆத்தி எனை நீ பாத்தவுடனே,
காத்தில் வச்ச இறகானேன்.
காட்டு மரமா வளர்ந்த இவனும்,
ஏத்தி வச்ச மெழுகானேன்!

உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து,
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்,
மருகுதே, உருகுதே!

உன் வழியில்
என் பயணம் வந்தடைய
நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

உன் அழகில்…
உன் வழியில்…
உன் அழகில்…
உன் விழியில்…

 மீண்டுமொரு இனிய பாடலுடன் சீக்கிரம் இணைவோம்.

isaipaa diwali