காதல் கணவா உந்தன்… – கோச்சடையான்

இசை அன்பர்களுக்கு இனிய வணக்கம்.

இதோ ஒரு புத்தம் புதிய பாடல், ரஹ்மான் பாடல், சூப்பர் ஸ்டார் பாடல். இனிய பாடல், இலகும் பாடல். ஆமா கோச்சடையான் தான். வரும் வருமென்று, இறுதியில் பாடலும் வெளிவந்துவிட்டது. முப்பரிமாணம் கொண்ட படம். அதும் நம் பழைய தமிழ் மன்னர்கள் பற்றிய படம். இந்த பாடலில் இசைப்பாவில் அறிமுகமாகும் பாடகி வேறு யாரும் இல்லை, ரஜினி அவர்களின் அன்பு துணைவியார் -> லதா ரஜினிகந்த்.

ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். மயங்கர்கரசி, சிவகாமி, பாண்டியன் குமாரி, குந்தவை.. என்று யார் பாடி, போருக்கு தலைவனை அனுப்பினாலும் சரியாக அமையும் என்று சொல்லலாம். ஆனால் ராணிகள் சமையலறையில் என்ன புதுமை செய்வார்கள் என்று வைரமுத்து அவர்களுடன் தான் கேட்க வேண்டும். அல்ல ஒரு சாமான்யமான குடும்ப பெண் பாடும் பாடலாகக் கூட இது அமையலாம். பொறுத்து இருந்து பார்போம்.

நண்பர்களின் கருத்துகள்

இசை இசைப்பது போலவே பாடப்படும் வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. காதல் கொண்ட நாயகி தன் கணவனை கரம் பற்றி, எத்தருணத்திலும் கரம் விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறாள், வைரம் போன்றுது தன் சத்தியம் என்கிறாள். அவனின் ரகசியங்களை அழகாக காப்பேன் என்கிறாள். காலம் மாறும் என்றாலும் என்றும் உறுதுணையாக இருப்பாள். தாய்க்கு தாயாக அரவணைத்தும் உயிருக்கு உயிராக அவன் கனவுகள் நிஜமாக தன்னை அர்ப்பணிப்பாள் என்று உருகுகிறாள். அவன் வாழ்வு வீழ்கையில் இவள் உயிர் தருவாள்…இவ்வகையாக தன் அன்பின் மேல் சத்தியம் செய்கிறாள். பாடலை திரும்பி  திரும்ப கேட்டு ரசித்தவண்ணமே இருக்கலாம். அவ்வுளவு அருமையான குரல் பாடியவருக்கு லதா ரஜினிகாந்த அவர்களுக்கு வாழ்த்துக்கள்

படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடல் : மன்னிப்பேன் சத்தியம்
பாடியவர் : லதா ரஜினிகாந்த

காதல் கணவா உந்தன்,
கரம் விடமாட்டேன்.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் வேலே.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே !

ஒரு குழந்தை போலே,
ஒரு வைரம் போலே,
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது !

வாழை மரம் போல  என்னை
வாரி வழங்குவேன் !
ஏழைக்கண்ட புதையல் போல,
ரகசியம் காப்பேன் !

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்,
கண்-அவன் என்பேன் !
உனது உலகை எனது கண்ணில்,
பார்த்திட செய்வேன் !

மழை நாளில் உன் மார்பில்,
கம்பளி ஆவேன் !
மலைக் காற்றாய் தாலைக்கோதி,
நித்திரை தருவேன் !

காதல் கணவா..

உனது உயிரை எனது வயிற்றில்,
ஊற்றிக் கொள்வேன் !
உனது வீரம், எனது சோறும்,
பிள்ளைக்கு தருவேன் !

காலம் மாற்றம் நேரும்போது
கவனம் கொள்வேன்.
கட்டிலறையில் சமையலைறையில்
புதுமை செய்வேன்.

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்.
உன் ஆண்மை நிறையும்போது
உந்தன் தாய்போல் இருப்பேன்.

உன் கனவுகள் நிஜமாக,
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் வீழ,
என்னுயிர் தருவேன் !

காதல் கணவா..

மேலும் இனிய மற்றும் புதிய படப்பாடல்களுடன் விரைவில் சந்திப்போம்

எங்கே போகுதோ வானம் ?

இன்ப இசையின் இனிய வணக்கம்

வெற்றி கூட்டணிகள் என சில உண்டு. நம்மை என்றும் ரசிக்க வைக்கும் அத்தகு அமைப்புகளுள் ஒன்று  -> வைரமுத்து + எஸ்.பி.பி + ஏ.ஆர்.ரஹ்மான் + ரஜினிகாந்த். அப்படியாக சமீபத்தில் வெளிவந்துள்ளது, கோச்சடையான் படத்தின் முதல் பாடல். Single Release. ஒரு பாடலை மட்டும் முதலில் வெளியிடுவது, இந்த காலத்தின் ஜுரம். பல எதிர்பார்ப்புகளை சுமந்து வரும் மாபெரும் (3D) படத்தின் சிறு துளி இது.

Kochadaiyaanநாயகனின் Build-up பாடல்கள் தான் மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் தமிழ் திரை, ஹீரோ சார்ந்தே உள்ளது. அதுவும் ரஜினி என்றால் சொல்லவே வேணாம். பாடலே சாட்சி சொல்கிறது. போருக்கு போகும் வீரனின், நம்பிக்கை வார்த்தைகளாக தோன்றுகிறது, அவனை உற்சாகமூட்டும் கோரஸில் வீரர்கள் பாடுகின்றனர்.

முழுக்கவே இசையால் நிரப்பப்பட்ட இப்பாடல் ரஹ்மான் ரசிகர்கள் அனைவருக்கும் எளிதில் பிடித்துவிடும். இசையின் வேகத்துக்கு சற்றும் குறையாத கவிஞர் வைரமுத்துவின் பாடல்வரிகள்  ஒருபுறம், இசைக்கும், பாடல் வரிகளுக்கும் கூடுதலாக கம்பீரம் ஏற்றும் எஸ்.பி.பி-யின் குரல் என மனதிற்கு உற்சாகம் அளிக்கும் கூட்டணி.
உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்துவிட்டேன் !
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்  !
என ரசிகர்களுக்கும் சேர்த்து ரஜினிக்கான ‘தலைவா!’பாடல் !
ஜெய கோஷங்களும், எக்காளங்களும், சங்க நாதமும், முரசுகளும் சேர்ந்து, குதிரை மீது எழுச்சியுடன் பாய்ந்து செல்லும்  வீரனின் உணர்வை நமக்கு தருகிறது ரஹ்மானின் இசை. தலைவா, தலைவா என ஆடவும் வைக்கிறது….

படத்தின் மற்ற பாடல்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்க வைக்கும் ஒற்றைப் பாடல். இதோ பாடல் வரிகள் உங்களுக்காக……

படம் : கோச்சடையான்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்,
வையம் வென்றாய்,
எல்லை உனக்கில்லை
தலைவா….

காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது.
வெற்றிச் சங்கொலி
என்றுமே ஓயாது
ஓயாது….

ஹே…
உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே…
எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தாலும்
பாயும் பறவையாவோம் !
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகமாவோம் !

காடு தடுத்தால்
காற்றாய் போவாம் !
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம் !

வீரா – வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்.
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்.

லட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை
தலைவா….

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும் – எந்த
நாளும் பொய்த்ததில்லை

இளைய சிங்கமே
எழுந்து போராடு
போராடு….

வீரா – வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால்
உயிர்க் கொண்டு எழுந்துவிட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்

ஹே…
உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே…
எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை
தலைவா….

காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி
என்றுமே ஓயாது
ஓயாது….

பாடல், அதன் வரிகள் மற்றும் சில படக்காட்சிகளுடன் காண்க:

நீண்ட இடைவெளிக்குப் பின் இசைப்பாவில் ரஹ்மான் பாடல் வந்துள்ளது #மகிழ்ச்சி. 125 கோடி செலவில் பிரம்மாண்டமாக, மூன்று வேடங்களில் ரஜினி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களும் இதில் புது தொழில்நுட்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு பாடலை ரஜினி அவர்களே பாடியுள்ளாராம். இன்னும் இன்னும் என்ன என்ன படத்தில் உள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்ககலாம்.

இசைப்பா +
ஏ.ஆர்.ரஹ்மான் – இதுவரை 4 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் : ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்

கருத்துகள், திருத்தங்களை வழக்கம்போல் எதிர்பார்க்கிறோம்.