வணக்கம்.

நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது நான்காம் பாடல்.

ஒரு இனிய காதல் பாடல். இளையராஜாவின் காதல் பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கினால், எழுதிக்கொண்டே போகலாம். அதேநேரம் கேட்கையில் உள்ளம் மயக்கும் பாடல்கள் பல திரையில் காட்சியமைப்பில் மட்டரகத்தில் அமைந்திருப்பது ராஜாவின் இசையில் வருத்தம்கொள்ள வைக்கும்.

NEPஅதனால்தான் கௌதம்+ராஜா கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து வரவேற்றார்களோ தெரியவில்லை. அழகியலான காட்சிகளை எடுப்பதில் கௌதமும் பேர் வாங்கியவர்தான். ஆகவேதான் இப்படத்தின் பாடல்களின் காட்சியமைப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இப்பாடலின் இடையிசை மிக நேர்த்தியாக  இசையோடு இயைந்த காட்சிகளால் சூழப்பட்டிருக்கும். அதிலும் துவக்கத்தில் கிடாரின் மெல்லிய மீட்டலின் தொடர்ச்சியாக எழும் வயலினுக்குள் கரைவதைத் தடுக்க முடியாது. இந்த பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இளையராஜா இசையில் யுவன் பாடியதுதான். இந்த பாடலை இன்னும் சிறப்பாக பாடியிருக்கலாம் என்கிறபடியோ, யுவன் சரியாகவே பாடவில்லை என்கிறபடியோ கருத்துகள் வந்தன. அதில் எந்தளவு சரி என்பது உங்கள் ரசனைக்கு உட்பட்டது. நீங்களே கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.

படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே

விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

என் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி
உன்னைக் கண்டு கொண்டேனே

ஓஹோ!
என் தந்தை-தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன் மாக்கோலம்
அதைக் கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து இந்த கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே 
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்……!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்

என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்

(சாய்ந்து சாய்ந்து)

காட்சிகளை விட அழகியலாய் வரிகளோடு பாடல்:

இசைப்பா+

பாடகி ரம்யா என்.எஸ்.கே, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பேத்தி ஆவார்.

இன்னும் இன்னும் தொடரும்… உங்கள் திருத்தங்களை, கருத்துக்களை கூறலாம்.

பின்னூட்டமொன்றை இடுக